عن أبي هريرة رضي الله عنه قال: أُتِي النبي صلى الله عليه وسلم برجل قد شَرِب خمرا، قال: «اضربوه». قال أبو هريرة: فمنا الضارب بيده، والضارب بنعله، والضارب بثوبه، فلما انصرف، قال بعض القوم: أخزاك الله، قال: «لا تقولوا هكذا، لا تُعِينُوا عليه الشيطان».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

மதுபானம் அருந்திய ஒரு மனிதன் ரஸூல் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்.அவரை அடியுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள்.என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிக்கின்றார்கள். மேலும் " நம்மில் சிலர் அந்த மனிதனைத் தம் கரத்தாலும்,இன்னும் சிலர் தம் செருப்பாலும்,மற்றும் சிலர் தம் துணியாலும் அடித்தனர்.மேலும் அவர் அங்கிருந்து செல்லும் போது சிலர் அல்லாஹ் உன்னைக் கேவலமடையச் செய்வானாக என்று கூறினர்.அதற்கு நபியவர்கள் நீங்கள் இப்படிக் கூறாதீர்கள்,இப்படி அவருக்கு எதிராக சைத்தானுக்குத் துணை போகாதீர்கள்,என்று ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" எனவும் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:மதுபானம் குடித்திருந்த ஒரு மனிதனை ரஸூல் (ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்கள் அழைத்து வந்தனர்.அப்பொழுது அவரை அடிக்கும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.எனவே அவரை ஸஹாபாக்கள் அடிக்கலாயினர்.அவ்வமயம் சிலர் அவரை வெறும் கையால் அவரை அடித்தனர்.இன்னும் சிலர் தங்களின் செருப்பைக் கொண்டு அவரை அடித்தனர்.மற்றவர்களை எச்சரிக்கை செய்யும் நோக்கில் அவர்கள் இப்படி செய்தனர்.வேறு சிலர் தங்களின் துணியைக் கொண்டு அவரை அடித்தனர்.அதாவது 'ஹத்து எனும் தண்டனையை நிறைவேற்ற உபயோகிக்கும் சவுக்கை அவர்கள் பயன்படுத்தவில்லை.மேலும் ஈத்த மர மட்டைகளைக் கொண்டு அல்லது செருப்புக்களைக் கொண்டு இரண்டு இரண்டு தடவைகள் அவரை அடிக்கும்படியாக இருபது பேர்களுக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று பிரிதொரு ரிவாயத்தில் பதிவாகியுள்ளது.இது மதுபானத்தின் ஹத்து நாற்பது கசையடிகள் என்பதைத் தௌிவு படுத்துகின்றது.எனினும் குலபாஉர் ராசிதீன்கள் இதை விவும் அதிகமாகத் தண்டித்திருப்பதாகப் பதிவாகியுள்ளது.அதன்கருத்தாவது நாட்டுத் தலைவர் சந்தர்ப்பததை பொறுத்து மேற்கொள்ளும் தண்டனையைச் சார்ந்ததாகும்.மேலும் மேற்படி நபரை மக்கள் அடித்து முடிந்ததும் அவருக்கு சமூகத்தின் மத்தியில் இழிவும்,அவமானமும் உண்டாகட்டும்,என்று சிலர் அவரை சபித்தனர்.அப்பொழுது நபியவர்கள் "இப்படிக் கூறாதீர்கள்,இப்படி அவருக்கு எதிராக சைத்தானுக்குத் துணை போகாதீர்கள்,என்று கூறினார்கள்.ஏனெனில் சில வேளை இவர்களின் இந்த சாபம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுமாயின்,அவன் அவமானம் அடைய வேண்டுமென்ற சைத்தானின் நோக்கம் நிறைவேறிவிடும் .என்பதற்காகவும், ஹத்தின் தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளி மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவுமே நபியவர்கள் இப்படிக் கூறாதீர்கள் என்று கூறினார்கள்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு