عن أسامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «قُمْتُ على باب الجنَّة، فإذا عامَّة من دخلها المساكين، وأصحاب الجَدِّ مَحْبُوسُونَ، غير أن أصحابَ النَّار قد أُمِرَ بهم إلى النَّار، وقُمْتُ على باب النَّار فإذا عَامَّة من دخلها النساء».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

"நான் சுவர்க்க வாசலில் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது அதில் பிரவேசித்தவர்களில் அதிகமானோர் ஏழைகளாக இருந்தனர்.செல்வந்தர்களோ தடுக்கப்பட்டிருந்தனர்.மேலும் நரகவாசிகளுக்கு நரகின் பக்கம் செல்லும்படி உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.நான் நரகவாசலில் நின்று கொண்டிருந்த அச்சமயம் அதில் பிரவேசித்தவர்களில் அதிகமானோர் பெண்களாக இருந்தனர்".என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என உஸாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

செல்வந்தர்களை விட ஏழைகள்முதலில் சுவர்க்கம் செல்வர்.ஏனெனில் அவர்கள் செல்வமற்ற ஏழைகளாக இருந்தபடியால் அவர்களிடம் அது பற்றிய விசாரணை எதுவும் இருக்காது.இது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் கண்ணியமும்,அவர்கள் உலகில் இழந்த சௌபாக்கியங்களின் நஷ்டயீடுமாகும்.ஆனால் அழியும் பாக்கியங்களான செல்வம்,பட்டம், பதவிகளின் சொந்தக் காரர்களான செல்வந்தர்களோ மறுமையில் பெரிய மைதானத்தில் விசாரணைக்காக நீண்ட நேரம் காத்திருப்பார்கள்.இது அவர்களின் அதிக செல்வம், உயர்ந்த அந்தஸ்து என்பவற்றின் மூலம் அவர்கள் தங்களின் மனோ இச்சைகளுக்கு இசைவாக உலகில் அனுபவித்து வந்த சுகபோகங்களின் விளைவே.ஏனெனில் உலகில் அனுபவித்து வந்த ஹலாலான விடயங்களுக்காக விசாரணையும்,ஹராமான விடயங்களுக்காகத் தண்டணையும் உண்டு.ஆனால் ஏழைகளோ இதனை விட்டும் நீங்கியவர்கள்.மேலும் நரகில் அதிகம் பிரவேசிக்கின்றவர்கள் பெண்களே.காரணம் அவர்கள் அதிகமாக முறையீடு செய்கிறவர்களாகவும், தங்களின் புருஷர்களின் நல்ல கருமங்களை நிராகரிக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர். என்பதனால்தான்என்பது இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு