عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَتَتَّبِعُنَّ سَنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ، شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا فِي جُحْرِ ضَبٍّ لَاتَّبَعْتُمُوهُمْ» قُلْنَا: يَا رَسُولَ اللهِ آلْيَهُودَ وَالنَّصَارَى؟ قَالَ: «فَمَنْ؟».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2669]
المزيــد ...
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், 'அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'வேறு யாரை? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 2669]
நபியவர்களின் காலத்திற்கு பிறகு, தனது சமூகத்தில் சிலரின் நிலை குறித்து நபிகளார் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். அதாவது தனது சமூகத்தாரில் சிலர் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை தமது நம்பிக்கைக் கோட்பாடுகளிலும் செயற்பாடுகளிலும் வழக்காறுகளிலும் பாரம்பரிய விடயங்களிலும் மிகவும் துல்லியமாக சாணுக்குச் சாண் முழத்திற்கு முழம் பின்பற்றி நடப்பார்கள். இந்நிலையை அவர்கள் விளக்கும் போது அந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் உடும்பின் பொந்தினுள் நுழைந்தாலும் இவர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து அவ்வேளையைச் செய்வார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்.