عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «من تَشبَّه بقوم، فهو منهم».
[حسن] - [رواه أبو داود وأحمد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடப்பாரோ அவர் அச்சமூகத்தைச் சேர்ந்தவராவர்".
ஹஸனானது-சிறந்தது - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

இந்த நபிமொழி ஒரு பொது அறிவித்தலை விடுக்கின்றது. நல்ல மனிதர்களுக்கு ஒப்பானவர்கள் நல்லவர்களாக இருந்து, அவர்களுடனே மீள எழுப்பப்படுவர். காபிர்கள், தீயவர்களுக்கு ஒப்பானவர்கள் அவர்களுடைய பாதை, போக்கிலேயே பயணிப்பர்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பிற மதத்தவர்களுக்கு ஒப்பாவதை எச்சரித்தல்.
  2. நல்லவர்களுக்கு ஒப்பாவதை ஊக்குவித்தல்.
  3. குறிக்கோள்களுக்குரிய சட்டங்களே அதற்கிட்டுச் செல்லும் வழிமுறைகளுக்கும் உண்டு. வெளித்தோற்றத்தில் காபிர்களுக்கு ஒப்பாதல் தடுக்கப்பட்ட உள்ரங்க நேசத்திற்கு இட்டுச் செல்கின்றது.
  4. ஒப்பாவதின் விரிவான சட்டங்களை முழுமையாக அறிய முடியாது. ஏனெனில் இது ஒப்பாவதின் வகை மற்றும் அது உள்ளடக்கிய தீமைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது, குறிப்பாகத் தற்காலத்தில்.எனவே ஒவ்வொரு விடயத்தையும் மார்க்க விதிமுறையுடன் அலசிப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும்.
  5. காபிர்களுடைய மத விவகாரங்கள், பிரத்தியேகமான வழக்காறுகளிலேயே அவர்களுக்கு ஒப்பாவது தடுக்கப்பட்டுள்ளது. தொழில் கற்றல் நடவடிக்கை போன்ற மதத்துடன் நேரடித் தொடர்பில்லாத விடயங்கள் இத்தடையில் நுழைய மாட்டாது.
மேலதிக விபரங்களுக்கு