عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «ليس الشديد بالصُّرَعة، إنما الشديد الذي يملك نفسه عند الغضب».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன். உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

உண்மையான வலிமை உடல், தசைகள் வலிமையல்ல, எப்போதும் சக்திவாய்ந்தோரை வீழ்த்துபவனல்ல உண்மையான பலசாலி கோபம் கடுமையாகும் போது தன்னைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவனே உண்மையான பலசாலி. ஏனெனில் இது அவனிடமுள்ள ஷைத்தானை மிகைத்து, தன்னைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பறைசாற்றுகின்றது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. சகிப்புத் தன்மையின் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்".
  2. எதிரிகளுடன் போராடுவதை விட கோபத்தின் போது ஆன்மாவுடன் போராடுவது மிகக் கடுமையானதாகும்.
  3. வலிமை பற்றிய அறியாமைக் கால எண்ணக்கருவை இஸ்லாம் ஒரு தனித்துவமான முஸ்லிம் ஆளுமையை உருவாக்கும் கண்ணியமான பண்பாக மாற்றியுள்ளது. எனவே மக்களில் மிகவும் வலியானவர் தன்னை கட்டுப்பாட்டில் வைத்து, ஆன்மாவை அதன் ஆசைகளிலிருந்து விலக்கியவராவார்.
  4. உடலியல், ஆன்மா, சமூகவியல் ரீதியான பல தீங்குகள் கோபத்தில் இருப்பதால் அதனை விட்டும் தூரமாவது அவசியமாகும்.
  5. கோபம் என்பது சுய கட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களைத் தொலைக்கக் கூடிய ஒரு மனித பண்பாகும்.
மேலதிக விபரங்களுக்கு