عن أبي ذر الغفاري رضي الله عنه مرفوعاً: «لا تَحْقِرَنَّ من المعروف شيئا، ولو أن تَلْقَى أخاك بوجه طَلْق».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல்கிஃபாரி (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஒருவரை சந்திக்கும் போது புன்முறுவல் பூப்பது ஸுன்னா என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது. இதன் மூலம் தனது சகோதர முஸ்லிமுக்கு அன்பு காட்டி, மகிழ்விக்க முடியுமென்பதால் அற்பமாகக் கருதாமல் ஆர்வத்துடன் செய்ய வேண்டிய நற்கருமங்களில் இதுவும் ஒன்றாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. விசுவாசிகளுக்கு மத்தியில் பரிவு, அன்பு, முகமலர்ச்சி புன்முறுவல் போன்றவற்றை இந்நபிமொழி வேண்டி நிற்கின்றது.
  2. இந்த மார்க்கம் அனைத்தையும் உள்ளடக்கிய பூரணமான மார்க்கமாகும். முஸ்லிம்களின் நலன், ஒற்றுமையை ஏற்படுத்தும் அனைத்தையும் சட்டபூர்வமாக்கியுள்ளது.
  3. நற்கருமங்களைச் செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பிறருடன் தொடர்புடைய விடயங்கள், அவற்றை அற்பமாகக் கருதக் கூடாது.
  4. முஸ்லிம்களுக்கு மத்தியில் அன்னியோன்யம் உருவாக அவர்களை மகிழ்விப்பது ஸுன்னத்தாகும்.
மேலதிக விபரங்களுக்கு