+ -

عن أبي مسعود الأنصاري رضي الله عنه قال:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أُبْدِعَ بِي فَاحْمِلْنِي، فَقَالَ: «مَا عِنْدِي»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَنَا أَدُلُّهُ عَلَى مَنْ يَحْمِلُهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1893]
المزيــد ...

அபூ மஸ்ஊத் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து எனது வாகனத்தை நான் இழந்துவிட்டேன் ஆகவே என்னை ஏற்றிச் செல்லுங்கள் என்று கூறியபோது, நபியவர்கள் என்னிடம் அதற்கான வசதி இல்லை என்று கூறினார்கள். அவ்வேளை ஒரு மனிதர் அவரை ஏற்றிச்செல்வதற்குரிய ஒரு நபரை நான் காட்டுகிறேன் என்று கூறியபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'நன்மையான ஒரு காரியத்திற்கு யார் வழிகாட்டுகிறாரோ அவருக்கு அதைச் செய்தவரின் கூலியும் உண்டு' என்று கூறினார்கள்..

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 1893]

விளக்கம்

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்று தனது வாகனத்தை இழந்து விட்டேன். எனவே என்னை ஒரு வாகனத்தில் ஏற்றிச்செல்லுங்கள், அல்லது நான் சென்றடைவதற்கான ஒரு வாகனத்தை தாருங்கள் என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தன்னிடம் அவரை ஏற்றிச்செல்வதற்குரிய வாகனம் எதுவும் கிடையாது என விளக்கம் கூறினார்கள். அவ்வேளை அந்த இடத்தில் ஆஜராகி இருந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே!அவரை ஏற்றிச்செல்லக்க கூடிய ஒருவரை நான் காண்பித்துக் கொடுக்கிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தேவையுடையவரை தர்மம் வழங்கக் கூடியவருக்கு காட்டிக் கொடுத்தமைக்காக தர்மம் வழங்கியவரின் கூலியில் பங்காளியாக உள்ளார் எனத் தெரிவித்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நல்ல விடயங்களுக்கு வழிகாட்டுவதை ஊக்குவித்தல்.
  2. நல்ல செயல்களை செய்வதற்கு ஊக்குவித்தல் முஸ்லிம் சமூகத்தின் கூட்டொருமைப்பாட்டிற்கும் ஒருங்கிணைப்புக்கு மான வழிகளில் ஒன்றாகும்.
  3. வல்லோனாகிய அல்லாஹ்வின் அருட்கொடையின் விசாலம்.
  4. இந்த ஹதீஸ் நற்செயல்களுக்கான ஒரு பொது விதியாக அமைந்துள்ளது. ஆகவே இதனுள் எல்லா வகையான நற்காரியங்களும் அடங்குகின்றன.
  5. தேவை கருதி வரும் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னால் முடியாத ஒரு மனிதன் அதனை நிறைவேற்ற இன்னொருவரை காண்பித்துக் கொடுப்பார்.
மேலதிக விபரங்களுக்கு