عَنْ عُمَرَ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ لَبِسَ الحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5834]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்'
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 5834]
இவ்வுலகில் ஆண்களில் பட்டாடை அணிபவர் மறுமையில் அதனை அணியமாட்டார் என இந்த ஹதீஸில் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். ஒருவர் பட்டாடை அணிந்து அதற்காக தௌபா –பாவமீட்சி கோராது விட்டால் அவறுக்கான மறுமையின் தண்டனை இதுவாகும்.