عن أنس بن مالك رضي الله عنه:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ.

[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 2582]
المزيــد ...

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார்கள்.

[சரியானது] - [இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்] - [புஹாரி - 2582]

விளக்கம்

வாசைன திரவியங்கள் வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தது. ஏனெனில் அது சுமந்து செல்வதற்கு எளிதாக உள்ளது, மற்றும் நறுமண மிக்கதாகவும் காணப்படுகிறது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நறுமணப் பொருட்கள் வழங்கப்படும் போது அதனை ஏற்பது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதனைச் சுமந்து செல்லச் செலவு கிடையாது, அதனை ஏற்பதால் கொடுத்தவர் சொல்லிக் காட்டும் அளவு முக்கியத்துவமும் கிடையாது.
  2. யார் நறுமணத்தை பரிசாக அளிக்கிறாரோ அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வதில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பூரண நற்குணம் தெளிவாகிறது.
  3. நறுமணத்தைப் பயன்படுத்த ஆர்வமூட்டுதல்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (63)
மேலதிக விபரங்களுக்கு