عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «من عُرِضَ عليه رَيْحَانٌ فلا يرده، فإنه خفيف الْمَحْمِلِ، طيب الريح».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
ரைஹான் (குங்குமப் பூ) வாசனைப்பொருள் யாருக்காவது வழங்கப்பட்டால் அதனை மறுக்காது பெற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் அது சுமப்பதற்கு இலகுவானதாகவும், நல்ல வாசனையுடையதாகும் இருப்பதினாலாகும்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
வாசனைப் பொருள் யாருக்காவது அன்பளிப்பாக வழங்கப் பட்டால் அதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகும் ஏனெனில் அதனை சுமப்பதில் எவ்வித சிரமும் கிடையாது அதே போல் அதன் நறுமணமும் சிறந்ததாகவும் இருக்கிறது.