+ -

عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما:
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنِ النَّذْرِ، وَقَالَ: «إِنَّهُ لَا يَأْتِي بِخَيْرٍ، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1639]
المزيــد ...

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நேர்ச்சை செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். நோர்ச்சையானது (அல்லாஹ் விதித்தவை தவிர) எந்த நன்மையையும் கொண்டு வரமாட்டாது. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை).

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 1639]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நேர்ச்சை செய்வதை தடைசெய்தார்கள். நேர்ச்சை என்பது மார்க்கரீதியாக கட்டாயப்படுத்தாத ஒன்றை தான் செய்வதாக ஒருவர் தன்மீது கடமையாக்கிக்கொள்ளும் ஒரு விடயமாகும். தொடர்ந்து நபியவர்கள் குறிப்பிடுகையில் : நேர்ச்சையானது அல்லாஹ் விதித்த எதனையும் முற்படுத்தவோ பிற்படுத்தவோ மாட்டாது. மாறாக தனக்குத் தேவையானதை மாத்திரமே செய்யும் கஞ்சனின் செல்வத்தை மாத்திரமே அது வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில் நேர்ச்சையானது அல்லாஹ் ஏற்கனவே நிர்ணயித்த –விதித்தத் தவிர எதனையும் கொண்டு வரப் போவதில்லை.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இஸ்லாத்தில் நேர்ச்சை செய்வது மார்க்கரீதியாக ஊக்குவிக்கப்படவில்லை. ஆனால் ஒருவர் நேர்ச்சை செய்து அது பாவகரியமாக இல்லாதிருந்தால் அதை நிறைவேற்றுவது கடமையாகும்.
  2. நேர்ச்சைகளைத் தடை செய்வதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். அவர் கூறினார்: 'நேர்ச்சை எந்த நன்மையையும் தராது.' ஏனெனில் நேர்ச்சையானது அல்லாஹ்வின் விதியை மாற்ற முடியாது. அத்துடன் நேர்ச்சை செய்தவர்; தனது நேர்ச்சையின் காரணமாகவே தேவை நிறைவேறியது என்ற வாய்ப்பு காணப்படுகிறது. இதை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.
  3. குர்துபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'நபி (ஸல்) அவர்கள் தடை செய்த ஒரு வகை நேர்ச்சைக்கு உதாரணம், 'எனது நோய் குணமாகிவிட்டால், நான் இவ்வளவு தர்மம் செய்வேன்' என்று கூறுவதாகும்.'
  4. இவ்வாறு நேர்ச்சை செய்வது கூடாது என்பதற்கான காரணம் ஒரு நல்ல செயலைச் செய்வதன் ஊடாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதையே அவரின் செயல் காட்டுகிறது இந்த வகையில் அவரின் நற்செயலானது இதயசுத்தியத்துடன் தூய்மையாக செய்யப்பட்டதல்ல. மாறாக அவர் நிபந்தனையிட்டு தனது காரியத்தை அடையும் வழிமுறையை கைக்கொள்கிறார். இன்னும்; கூறுவதாயின் குறிப்பிட்ட நற்காரியத்தை அவரது நோய் குணமாகியிருக்கா விட்டால், அவர் செய்திருக்க மாட்டார் என்பதை நாம் கருத்தில் கொள்ளும் போது இது இன்னும் தெளிவாகிறது. இது உலோபியின்; வழிமுறை 'அதாவது உலோபிகள் தாம்; செலவழித்ததற்கு ஈடாக ஒரு உறுதியான நலன் கிடைக்காது இருந்தால், அவர்கள் தங்கள் செல்வத்திலிருந்து எதையும் கொடுக்கத் தயாராக இருக்க மாட்டார்கள்.'
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு