عن أبي هريرة رضي الله عنه قَال: قَالَ رسولُ الله صلى الله عليه وسلم : "إنَّ اللهَ عز وجل يَقُولُ يَومَ القِيَامَةِ: يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ فَلَمْ تَعُدنِي! قَالَ: يَا رَبِّ، كَيْفَ أعُودُكَ وَأنْتَ رَبُّ العَالَمِينَ؟!، قَالَ: أمَا عَلِمْتَ أنَّ عَبْدِي فُلاَناً مَرِضَ فَلَمْ تَعُدْهُ! أمَا عَلِمْتَ أنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَني عِنْدَهُ! يَا ابْنَ آدَمَ، اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمنِي! قَالَ: يَا رَبِّ، كَيْفَ أطْعِمُكَ وَأنْتَ رَبُّ العَالَمِينَ؟! قَالَ: أمَا عَلِمْتَ أنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلانٌ فَلَمْ تُطْعِمْهُ! أمَا عَلِمْتَ أنَّكَ لَوْ أطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي! يَا ابْنَ آدَمَ، اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي! قَالَ: يَا رَبِّ، كَيْفَ أسْقِيكَ وَأنْتَ رَبُّ العَالَمينَ؟! قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ! أمَا عَلِمْتَ أنَّكَ لَوْ سَقَيْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

"ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன்.நீ என்னை நோய் விசாரிக்க வரவில்லை" என்று நிச்சயமாக.மறுமை நாளில் அல்லாஹ் சொல்வான் அதற்கு அவன் "என் இறைவனே!நீ சர்வலோக இரட்சகனாக இருக்கின்ற போது நான் எவ்வாறு உன்னிடம் நோய் விசாரிக்க வருவேன்?"என்று கூறுவான். அதற்கு அவன் "என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்ததை நீ அறிந்திருக்கவில்லையா?அப்போது நீ அவனை நோய் விசாரிக்கச்செல்லவில்லை! நீ அறியவில்லையா நீ அவனை நோய் விசாரிக்க சென்றிருந்தால் நீ அவனிடம் என்னைப் பெற்றுக்கொண்டிருப்பாய்"என்று.கூறுவான்.மேலும் "ஆதமின் மகனே!நான் உன்னிடம் உணவு கேட்டேன்.நீ எனக்கு உணவளிக்கவில்லை"என்று அவன் சொல்வான.அதற்கு அவன் "என் இறைவனே!நீ சர்வலோக இரட்சகனாக இருக்கின்றபோது நான் உனக்கு எவ்வாறு உணவளிப்பேன்!"என்று கூறுவான்.அதற்கு அவன் "நீ அறியவில்லையா?என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான்,நீ அவனுக்கு உணவளித்திருந்தால் நீ என்னிடம் அது இருக்கக்கண்டிருப்பாய்!"என்று கூறுவான்.மேலும் "ஆதமின் மகனே! நான் உன்னிடம் அருந்தக் கேட்டேன்.நீ எனக்கு அருந்த தரவில்லை" என்று.அவன் சொல்வான். அதற்கு அவன் "என் இறைவனே! நீ சர்வலோக இரட்சகனாக இருக்கின்ற போது நான் உனக்கு எவ்வாறு அருந்தத் தருவேன்" என்பான்.அதற்கு அவன் "என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் அருந்தக் கேட்டான்,நீ அவனுக்கு அருந்தக் கொடுக்கவில்லை.நீ அவனுக்கு அருந்தக் கொடுத்திருந்தால் நீ அதனை என்னிடம் கண்டுக் கொண்டிருப்பாய்." என்று கூறுவான்"என ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என அபூஹுரைரை (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஆதமின் மகனே!நான் நோயுற்றிருந்தேன் நீஎன்னை நோய் விசாரிக்க வரவில்லை"என்று மறுமை நாளில் அல்லாஹ் சொல்வான்."அதற்குஅவன்"நீயோ சர்வலோக இரட்சகனாக இருக்கின்ற போது உன்னை நோய் விசாரிக்க நான் எப்படி வருவேன்"என்று கூறுவான்என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள். இதன் கருத்தாவது நான் உன்னை நோய் விசாரிக்க வருவதற்கு நீ என் பக்கம் தேவை கொண்டவனாக இல்லையே என்பதாகும்.அப்பொழுது"நீ அறியவில்லையா!என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்தான் நீ அவனை நோய் விசாரிக்கச் செல்லவில்லை.நீ அவனை நோய் விசாரிக்கச்சென்றிருந்தாலோ நீ அவனிடம் என்னை அடைந்திருப்பாய்"என்று அல்லாஹ் கூறுவான்.நோய் என்பது குறையை உணர்த்தும் ஒரு பண்பு.அல்லாஹ்வோ இதிலிருந்தும் மற்றும் எல்லா குறைகளிலிருந்தும் தூய்மையானவன்.அப்படியிருக்க இந்த ஹதீஸில்"நான் நோயுற்றிருந்தேன் நீ என்னை நோய் விசாரிக்க வரவில்லை"என்று குறிப்பிட்டிருப்பதில் பிரச்சினை எதுவுமில்லை.ஏனெனில் இங்கு அல்லாஹ் நோயுற்றிருந்தான் என்பதன் கருத்தாவது அல்லாஹ்வின் நல்லடியார்களில் யாரேனும் ஒரு அடியான் நோயுற்றிருந்தான் என்பதாகும்.எனவேதான் ஆகாரம்,பானம் விடயத்தில் "அதனை என்னிடம் அடைந்து கொண்டிருப்பாய்" என்று அல்லாஹ் கூறியது போன்று இங்கு கூறாமல்"நீ அவனை நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் நீ அவனிடம் என்னை அடைந்து கொண்டிருப்பாய்"என்று அவன் கூறினான்.இது நோயாளி அல்லாஹ்வவை நெருங்கி விட்டான் என்பதை எடுத்துக் காட்டுகிறது.எனவேதான் ஒருவனுக்கு நன்மை அல்லது தீமை ஏற்படவென நோயாளி பிரார்த்தனனை செய்தால் அது மிகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க பிரார்த்தனையாக இருக்கும் என்று உலமாக்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும்"அவன் உணவளிக்கின்றான், அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை"(6:14) என்ற அல்லாஹ்வின் வாக்கின் பிரகாரம் அவன் தனக்காக உணவு கேட்க மாட்டான்என்பது தெரிந்த விடயம்.ஆகையால் அவனுக்கு உணவு,பானம் போன்ற எந்தத் தேவயைும் இல்லை. இப்படியுருக்க"ஆதமின் மகனே!நான் உன்னிடம் உணவு கேட்டேன் நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பதன் கருத்தாவது "அல்லாஹ்வின் ஏதோவொரு அடியான் பட்டினி கிடப்பதைஅறிந்திருந்த ஒருவன் அவனுக்கு உணவளிக்கவில்லை" என்பதாகும்.எனவே"நிச்சயமாக நீ அவனுக்கு உணவளித்திருப்பாயாகில்,நீ அதனை என்னிடம் பெற்றுக்கொண்டிருப்பாய்"என்று குறிப்பிட்டுள்ளான். அதாவது அதன் நன்மைகள் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை, அல்லது அதனைவிட பன்மடங்காக என்னிடம் சேமிப்பில் இருக்க நீ அதனை அடைந்து கொண்டிருப்பாய் என்பதாகும்.மேலும் அல்லாஹ்வின் வாக்கு"ஆதமின் மகனே!உன்னிடம் தண்ணீர் புகட்டும்படி நான் வேண்டினேன்" என்றால்'எனக்குத் தண்ணீர் புகட்டும்படி உன்னிடம் நான் வேண்டினேன்.அப்போது நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை"என்பதாகும்.அதற்கு அவன் "நீ சர்வலோக இரட்சகனாக இருக்க உனக்கு நான் எப்படி தண்ணீர் புகட்டுவேன்"என்பான்.அதாவது நீயோ ஆகாரமும்,பானமும் தேவையற்றவனாக இருக்கின்றாயே, என்பதாகும். அதற்கு"என்னுடைய இன்ன அடியான் தாகித்திருந்தான்,அதனை நீ அறியவில்லையா?அல்லது அவன் தண்ணீர் புகட்டும்படி உன்னிடம் வேண்டினான்,நீ அவனுக்குத் தண்ணீர் புகட்ட வில்லை.நீ அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் நீ அதனை என்னிடம் அடைந்துக் கொண்டிருப்பாய்"என்ற அல்லாஹ்வின் வாக்கின் கருத்தாவது "உன்னிடம் தண்ணீர் புகட்டும்படியாக வேண்டிய ஒருவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அது பத்து முதல் எழுநூறு மடங்குகள் என்ன,அதனைவிட பன்மடங்கு நன்மைகளாக அல்லாஹ்விடம் சேமிக்கப்படடிருக்க நீ அதனைக் கண்டிருப்பாய்"என்பதாகும்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம்
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு