عن سعد بن أبي وقاص –رضي الله عنه- مرفوعاً: "إنَّ اللهَ يُحبُّ العَبدَ التقيَّ الغنيَّ الخفيَّ".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) கூறுகின்றார்கள் : "இறை பக்தியுள்ள, தன்னிறைவுடன், ஒதுங்கி இருக்கும் அடியானை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ் தான் நேசிக்கும் அடியானின் பண்புகள் எப்படிப்பட்டவை என்பது பற்றித் தெளிவு படுத்தும் போது நபியவர்கள் "இறை பக்தியுள்ள, தன்னிறைவுடன், ஒதுங்கி இருக்கும் அடியானை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்" என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் கொள்வதன் மூலம் அவனை அஞ்சுபவரே இறை பக்தியுள்ளவன் ஆவார். மேலும் அவர் கடமையான விடயங்களை நிறைவேற்றியும், ஹராமான காரியங்களை தவிர்ந்தும் கொள்வான். மேலும் அவன் மனிதர்களை விட்டும் தேவையற்ற, தன்னிறைவுள்ளவனாகவும், அல்லாஹ்வின் பக்கம் மாத்திரமே தேவை உள்ளவனாகவும் இருப்பான். ஆகையால் அவன் மனிதர்களிடம் எதனையும் யாசிக்க மாட்டான். மேலும் தனது வறுமை நிலையை மனிதர்களிடம் காட்டிக் கொள்ளவும் மாட்டான். இவ்வாறு அவன் மனிதர்களின் பக்கம் திரும்பிப் பார்க்காமல், அவர்களை விட்டும் தேவையற்றவனாகவும், அல்லாஹ்வின் பக்கம் மாத்திரமே தேவை கொண்டவனாகவும் இருப்பான். மேலும் மக்களுக்கு மத்தியில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவோ, பிறர் தன்னை விசேடமாக சுட்டிக்காட்டுதல், மக்கள் தன்னைப் பற்றிப் பேசுமளவு பிரபலத்தை விரும்பாமல் ஒதுங்கியிருப்பதும் அவருடைய பண்பாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. குழப்ப நிலை, மக்களின் மோசமான நிலை என்பவற்றை அஞ்சும் போது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதுடன் மக்களை விட்டும் ஒதுங்கியிருப்பது சிறந்தது.
  2. அல்லாஹ் தனது அடியார்களை நேசிக்கத் தேவையான பண்புகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இறையச்சம், பணிவு, அல்லாஹ் தனக்கு அளந்ததைத் தன்னிறைவுடன் ஏற்றல் ஆகியனவே அப்பண்புகளாகும்.
  3. அல்லாஹ்வின் தகுதிக்கேற்ப நேசம் எனும் பண்பு அவனுக்குண்டு, அவன் தன்னை வழிப்படும் அடியானை நேசிக்கின்றான்.
மேலதிக விபரங்களுக்கு