عَنْ المِقْدَادِ بْنَ عَمْرٍو الكِنْدِيَّ رضي الله عنه:
أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلًا مِنَ الكُفَّارِ فَاقْتَتَلْنَا، فَضَرَبَ إِحْدَى يَدَيَّ بِالسَّيْفِ فَقَطَعَهَا، ثُمَّ لاَذَ مِنِّي بِشَجَرَةٍ، فَقَالَ: أَسْلَمْتُ لِلَّهِ، أَأَقْتُلُهُ يَا رَسُولَ اللَّهِ بَعْدَ أَنْ قَالَهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقْتُلْهُ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَطَعَ إِحْدَى يَدَيَّ، ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ مَا قَطَعَهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقْتُلْهُ، فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ، وَإِنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4019]
المزيــد ...
மிக்தாத் இப்னு அம்ர் அல்கின்தீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
நான் நபியவர்களிடம் இவ்வாறு கேட்டேன் : நான் நிராகரிப்பாளர்களில் ஒருவரைச் சந்தித்து, நாமிருவரும் சண்டையிட்டு, அவன் எனது ஒரு கையை வாளால் வெட்டிவிட்டான். பின்பு அவன் ஒரு மரத்தில் ஏறி தன்னைக் காத்துக்கொண்டு, 'நான் இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன்' என்று கூறுகின்றான். அல்லாஹ்வின் தூதரே! அவன் இவ்வாறு கூறிய பின்னர் நான் அவனைக் கொலை செய்யலாமா?' அதற்கு நபியவர்கள், 'அவரைக் கொலைசெய்யாதீர்கள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது ஒரு கையை வெட்டினான். வெட்டிய பின்பு தான் அவ்வாறு கூறினான்.' என்று கேட்டபோது, 'அவரைக் கொலைசெய்யாதீர். அவ்வாறு நீங்கள் அவரைக் கொலைசெய்தால், கொலைசெய்ய முன்னர் நீர் இருந்த தரத்தில் அவரும், அவர் கூறிய அவ்வார்த்தையைக் கூற முன்னர் அவர் இருந்த தரத்தில் நீங்களும் இருப்பீர்கள்.' என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 4019]
மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் இவ்வாறு கேட்கின்றார்கள், அதாவது, அவர் யுத்தத்தில் ஒரு நிராகரிப்பாளரைச் சந்தித்து, வாளால் யுத்தம் செய்துகொண்டிருக்கும் போது, அந்த நிராகரிப்பாளர் இவரது ஒரு கையை வாளால் வெட்டிவிட்டு, விரண்டோடி ஒரு மரத்தின் மீதேறி ஒதுங்கிக்கொண்டு, 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறினால், இவர் தனது கையை வெட்டிய காரணத்தினால் இவரைக் கொலை செய்ய முடியுமா? என்று கேட்கின்றார்கள்.
அதற்கு நபியவர்கள் 'கொலைசெய்யாதீர்கள்' என்று கூறிவிடுகின்றார்கள்.
அப்போது அந்த நபித்தோழர், 'அல்லாஹ்வுடைய தூதரே! இவர் எனது ஒரு கையை வெட்டியுள்ளார். அப்படியிருந்தும் நான் அவரைக் கொலைசெய்யக் கூடாதா?' என்று கேட்கின்றார்கள்.
அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: அவரைக் கொலை செய்யாதீர்கள். ஏனெனில், அவர் இப்போது உயிர் பாதுகாக்கப்பட்ட ஒருவராக மாறிவிட்டார். எனவே, அவர் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் நீ அவரைக் கொலை செய்தால், அவர் உன்னைப் போல, இஸ்லாத்தை ஏற்று உயிரைப் பாதுகாத்துக் கொண்டவர். நீ அவரைக் கொலைசெய்த காரணத்தினால், பலிக்குபலி என்ற அடிப்படையில், அவர் இருந்ததைப் போன்று, கொலை செய்ய அனுமதிக்கப்பட்டவராகிவிடுவீர்.