عن ابن عباس رضي الله عنهما قال:
كُنْتُ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: «يَا غُلَامُ، إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللهَ يَحْفَظْكَ، احْفَظِ اللهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللهِ، وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ، لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللهُ لَكَ، وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ، لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللهُ عَلَيْكَ، رُفِعَتِ الْأَقْلَامُ وَجَفَّتِ الصُّحُفُ».
[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي: 2516]
المزيــد ...
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :
ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னார்கள்: நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்] - [سنن الترمذي - 2516]
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சிறுவராக இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் சவாரி செய்கையில் நான் உமக்கு பயனுள்ள சில விடயங்களை கற்றுத்தரப்போகிறேன். அல்லாஹ் அதனை பயனுள்ளதாக ஆக்கித்தர வேண்டும் என அவரிடம் கூறினார்.
அல்லாஹ்வின் ஏவல்களைப் பேணி விலக்கள்களை தவிரந்து நடப்பதன் மூலம் அல்லாஹ்வை பேணி நடப்பீராக. அதாவது உன்னை அவன் வழிபாட்டிலும் வணக்கங்களிலும் காண வேண்டும். பாவத்திலும் குற்றங்களிலும் காணக்கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் உம்மை அல்லாஹ் இம்மை, மறுமை பேராபத்திலிருந்து பாதுகாப்பது உமக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும் கூலியாக அமைந்துவிடும். அதே போல் நீ எங்கு சென்றாலும் உமது காரியங்களில் அவன் ஒத்தாசை வழங்குவான்.
நீ ஏதாவது ஒன்றை கேட்டால் அல்லாஹ்விடமே கேள், அவன் கேட்போரின் கோரிக்கைகளை ஏற்று பதிலளிப்பவனாக உள்ளான்.
உமக்கு உதவி தேவைப்பட்டால் அல்லாஹ்விடம் மாத்திரமே உதவி கோருவீராக.
ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உமக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உமக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை கொண்வராக இருப்பீராக!
இந்த விவகாரத்தை அல்லாஹ் அவனின் அறிவிற்கும், ஞானத்திற்கும் ஏற்ப அவனே தீர்மானித்து எழுதிவிட்டான். ஆகவே அவனால் விதித்து எழுதப்பட்டவற்றை மாற்ற முடியாது.