عَن عَلِيٍّ بْنِ أَبِي طَالِبٍ رَضيَ اللهُ عنه قَالَ:
أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرِيرًا بِشِمَالِهِ، وَذَهَبًا بِيَمِينِهِ، ثُمَّ رَفَعَ بِهِمَا يَدَيْهِ، فَقَالَ: «إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي، حِلٌّ لِإِنَاثِهِمْ».
[صحيح] - [رواه أبو داود والنسائي وابن ماجه] - [سنن ابن ماجه: 3595]
المزيــد ...
அலீ பின் அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது இடது கையில் பட்டையும், வலது கையில் தங்கத்தையும் எடுத்து, இரு கைகளையும் உயர்த்தி, 'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன, பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்கள்”.
[صحيح] - [رواه أبو داود والنسائي وابن ماجه] - [سنن ابن ماجه - 3595]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இடது கையில் ஒரு பட்டுத் துணியையும், அல்லது பட்டுத் துண்டு ஒன்றையும், வலது கையில் ஒரு தங்க ஆபரணம் அல்லது அது போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு, 'உண்மையில், பட்டு மற்றும் தங்கம் அணிவது ஆண்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அது பெண்களுக்கு அனுமதிக்கப்படுகிறது' என்று கூறினார்கள்.