عَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ رَضيَ اللهُ عنهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:
«تُدْنَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْخَلْقِ، حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ»، قَالَ سُلَيْمُ بْنُ عَامِرٍ: فَوَاللهِ مَا أَدْرِي مَا يَعْنِي بِالْمِيلِ؟ أَمَسَافَةَ الْأَرْضِ، أَمِ الْمِيلَ الَّذِي تُكْتَحَلُ بِهِ الْعَيْنُ قَالَ: «فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ فِي الْعَرَقِ، فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى حَقْوَيْهِ، وَمِنْهُمْ مَنْ يُلْجِمُهُ الْعَرَقُ إِلْجَامًا» قَالَ: وَأَشَارَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى فِيهِ.

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2864]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூற, தாம் கேட்டதாக மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
மறுமையில் சூரியன் படைப்புக்களுக்கு ஒரு 'மீல்' அளவு நெருக்கமாக இருக்கும் அளவு நெருக்கமாக்கி வைக்கப்படும். (ஸுலைம் இப்னு ஆமிர் அவர்கள் கூறுகின்றார்கள் : மீல் என்பதன் மூலம் நாடப்படுவது, நில அளவீடுகளில் ஒன்றான மைலா? அல்லது கண்ணுக்கு சுர்மா இடப் பயன்படும் குச்சியான மீலா? என்பதை நான் அறியமாட்டேன்!) நபியவர்கள் தொடர்ந்து கூறினார்கள் : மக்கள் தமது செயற்களுக்கு ஏற்ப வியர்வையில் இருப்பார்கள். சிலரது வியர்வை கணுக்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை முழங்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை இடுப்பு வரை இருக்கும். சிலரை வியர்வை (அவர்களது வாயைக்) கடிவாளம் இடும் அளவு வாய் வரை வந்திருக்கும். இவ்வாறு கூறிவிட்டு நபிவர்கள் தமது வாய் நோக்கி சைகினை செய்து காட்டினார்கள்.

[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 2864]

விளக்கம்

இங்கு நபியவர்கள், மறுமையில் சுவனம் படைப்புக்களின் தலையில் இருந்து ஒரு 'மீல்' அளவு நெருக்கமாக இருக்கும் அளவு நெருக்கமாக்கி வைக்கப்படும் என்று அறிவிக்கின்றார்கள். ஸுலைம் இப்னு ஆமிர் எனப்படும் தாபிஈ அவர்கள் கூறுகின்றார்கள் : மீல் என்பதன் மூலம் நாடப்படுவது, நில அளவீடுகளில் ஒன்றான மைலா? அல்லது கண்ணுக்கு சுர்மா இடப் பயன்படும் குச்சியான மீலா? என்பதை நான் அறியமாட்டேன்! நபியவர்கள் தொடர்ந்து கூறினார்கள் : மக்கள் தமது செயற்களுக்கு ஏற்ப வியர்வையில் இருப்பார்கள். சிலரது வியர்வை கணுக்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை முழங்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை வேட்டிகளைக் காட்டும் இடமான இடுப்பு வரை இருக்கும். சிலரது வியர்வை அவரது வாய் வரை வந்து அவரைப் பேசாவிடாமல் தடுக்கும். இவ்வாறு கூறிவிட்டு நபிவர்கள் தமது வாய் நோக்கி சைகினை செய்து காட்டினார்கள்

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மறுமையின் அகோரங்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்தல். மேலும், அவற்றைப் பற்றி அச்சமூட்டல்.
  2. மறுமையின் விசாரணை மன்றத்தில் மக்கள் தத்தமது அமல்களுக்கு ஏற்ப, சிரமத்தில் இருப்பார்கள்.
  3. நற்கருமங்களுக்கு ஆர்வமூட்டல். மேலும், பாவச்செயல்கள் பற்றி அச்சமூட்டல்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (40)
மேலதிக விபரங்களுக்கு