عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا لَقِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ جِدَارٌ أَوْ حَجَرٌ ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ أَيْضًا».
[صحيح] - [رواه أبو داود] - [سنن أبي داود: 5200]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
உங்களில் ஒருவர் தனது சகோதரனைச் சந்தித்தால் ஸலாம் சொல்லட்டும். அவர்களுக்கு மத்தியில், ஒரு மரமோ, சுவரோ, கல்லோ பிரித்து, பின்னர் சந்தித்தாலும் ஸலாம் சொல்லட்டும்.
[சரியானது] - [இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்] - [ஸுனன் அபூ தாவூத் - 5200]
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறுமாறு நபியவர்கள் வலியுறுத்துகின்றார்கள். எந்தளவுக்கென்றால், அவர் ஒன்றாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கிடையில் மரம், அல்லது சுவர் அல்லது பெரிய கல் போன்ற ஏதாவதொன்று பிரித்து, பின்னர் சந்தித்தாலும் மீண்டுமொரு தடவை ஸலாம் சொல்லட்டும் என்று கூறுகின்றார்கள்.