+ -

عَنْ زِيَادِ بْنِ لَبِيدٍ رضي الله عنه قَالَ:
ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا، فَقَالَ: «ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ، وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ، إِنْ كُنْتُ لَأُرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ، أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ وَالنَّصَارَى يَقْرَؤونَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ، لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا؟!».

[صحيح لغيره] - [رواه ابن ماجه] - [سنن ابن ماجه: 4048]
المزيــد ...

ஸியாத் இப்னு லபீத் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டு, 'அது அறிவு மறையும் நேரத்தில் நிகழும்;' என்று கூறினார்கள். அதற்கு நான் 'அல்லாஹ்வின் தூதரே, நாம் குர்ஆனை ஓதி அதை நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறோம் எமது குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்கு மறுமை நாள் வரை இவ்வாறு கற்றுக்கொடுப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது அறிவு எப்படி மறைந்துவிடும், என்று கூறினேன் அதற்க நபியவர்கள்;: 'ஓ ஸியாதே, (உன்னை உனது தாய் இழப்பதால் கவளைக்கொள்ளாதிருக்கட்டும்) (மதீனாவில் நீ மிகவும் அறிவாளி என்று நான் நினைத்தேன். இந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தவ்ராத் மற்றும் இன்ஜீலைப் படிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதில் உள்ளவற்றை செயல்படுத்தவில்லையல்லவா?!

[அது பிரிதொன்றின் மூலம் ஸஹீஹானது] - [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்] - [سنن ابن ماجه - 4048]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள் அப்போது அவர்கள் மக்களிடமிருந்து அறிவு அபகரிக்கப்பட்டு உயர்த்தப்படும் காலம் ஒன்று வருவது குறித்து குறிப்பிட்டார்கள். அப்போது அங்கிருந்த ஸியாத் இப்னு லபீத் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆச்சரியப்பட்டு நபியவர்களிடம் அறிவு அகன்று எம்மிடமிருந்து எப்படி தொலைந்து போகும் ? நாம் அல்குர்ஆனை ஓதி அதனை மனனம் செய்கிறோம்.உண்மையில் அதனை ஒதிவருகிறோம் எமது மனைவியர், பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்கிறோமல்லாவா! என்று அவர் நபியவர்களிடம் கேட்க, நபியவர்கள் ஆச்சரியமடைந்தவர்களாக ஸியாதே (உன்னை உனது தாய் இழப்பதால் கவளைக்கொள்ளாதிருக்கட்டும்) என்று கூறிவிட்டு, நான் உங்களை மதீனாவாசிகளின் அறிஞர்களில் ஒருவராக எண்ணியிருந்தேன், எனக் கூறினார்கள் அதன் பின் நபிஸல்லல்லாஹு அறிவு இழக்கப்படுதல்என்பது அல்குர்ஆன் இழந்து போவதல்ல.மாறாக அறிவு இழக்கப்படுவது என்பது அதன்படி செயல்படுவது இல்லாமல் போவதாகும். வேதங்களிலிருந்து அறிந்தவற்றை நடைமுறைப்படுத்துதல்,செயற்படுத்துதல் இல்லாததின் காரணமாக யூத கிறிஸ்தவர்களிடத்தில் தௌராத் இன்ஜீல் வேதங்கள் இருந்தும் அவை பயனளிக்கவுமில்லை. அதன் கருத்துக்களால் அவர்கள் பயன் பெறவுமில்லை.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ الفولانية Итолёвӣ Урумӣ Канада الولوف البلغارية Озарӣ اليونانية الأوزبكية الأوكرانية الجورجية اللينجالا المقدونية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வேதபோதனைகள் நடை முறைப்படுத்தப்படுத்தப்படாது மக்கள் கரங்களில் அல்குர்ஆனும்; வேதங்களும்; இருப்பதில் எவ்விதப்பலனும் கிடையாது.
  2. நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மற்றும்அறிஞர்களின் மரணம், அறிவைக்கொண்டு செயற்படாமை ஆகிய விடயங்களின் மூலம் அறிவு உயர்த்தப்படுகிறது.
  3. அறிவு இழக்கப்படுதலும்,அறிவைக்கொண்டு செயற்படுவதை விட்டுவிடுவதும் மறுமைநாளின் அடையாளங்களுள் சிலதாகும்.
  4. கற்ற அறிவைக்கொண்டு செயற்படுவதே நோக்கம் என்பதினால் அமல் செய்வதை ஊக்கப்படுத்துதல்;.
மேலதிக விபரங்களுக்கு