عن المِقدام بن معدي كرب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
«إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ فَلْيُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ».
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي في السنن الكبرى وأحمد] - [سنن أبي داود: 5124]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல் மிக்தாம் இப்னு மஃதீ கர்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
'தனது சகோதரனை (அல்லாஹ்வுக்காக)ஒருவர் நேசித்தால் அவரிடம் தான் அவனை நேசிப்பதை அறிவிக்கட்டும்'.
[ஸஹீஹானது-சரியானது] - - [سنن أبي داود - 5124]
முஃமின்களுக்கு மத்தியில் தொடர்பை –உறவை- வலுப்படுத்தி அன்பையும் நேசத்தையும் பரப்பும்; வழிமுறையொன்றை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.