عَنِ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«البِرُّ: حُسْنُ الخُلُقِ، وَالإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ، وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ».
وَعَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «جِئْتَ تَسْأَلُ عَنِ البِرِّ وَالإِثْمِ»، قُلْتُ: نَعَمْ، قَالَ: «اسْتَفْتِ قَلْبَكَ، البِرُّ: مَا اطْمَأَنَّتْ إلَيْهِ النَّفْسُ، وَاطْمَأَنَّ إلَيْهِ القَلْبُ، وَالإِثْمُ: مَا حَاكَ فِي نَفْسِكَ وَتَرَدَّدَ فِي الصَّدْرِ، وَإِنْ أَفْتَاكَ النَّاسُ وَأَفْتَوْكَ».
[صحيح] - [الحديث الأول: رواه مسلم، والحديث الثاني: رواه أحمد والدارمي.] - [الأربعون النووية: 27]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக, அன்-நவ்வாஸ் இப்னு ஸிம்ஆன் அல்-அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
'நன்மை என்பது நற்குணமாகும், தீமையென்பது உனது மனதில் உருத்தலை ஏற்படுத்தி, மக்கள் அதனை -பார்ப்பதை –கண்டுககொள்வதை நீ வெறுப்பதாகும்.' வாபிஸா இப்னு மஃபத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தேன், அப்போது நபியவர்கள் 'நன்மை தீமை பற்றி நீ கேட்பதற்காக வந்துள்ளீர் அல்லவா' என்று கேட்க நான் ஆம் என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ' உனது உள்ளத்திடமே தீர்ப்புக்கேட்டுக்கொள். நன்மை என்பது மனத்திற்கும் உள்ளத்திற்கும் நிம்மதியை தரக்கூடியது. தீமை என்பது மனதை உருத்தி உள்ளத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. மக்கள் அது குறித்து உமக்கு தீர்ப்புக் கூறியிருந்தாலும் கூட உனது மனம் தயங்குவது பாவத்தைக் காட்டும்'
[சரியானது] - [முதலாம் ஹதீஸ்: இதை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார், இரண்டாம் ஹதீஸ்: இதை இமாம்களான அஹ்மத், தாரமீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர்] - [அல்அர்பஊன் அந்நவவிய்யா - 27]
இந்த ஹதீஸில் நன்மை (புன்னியம்-) மற்றும் பாவம் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நன்மையான குணங்களில் மிகவும் உயர்ந்தது அல்லாஹ்வை பயப்படுவதன் மூலம் அல்லாஹ்வுடன் சிறந்தமுறையில் நடத்தல். அத்துடன் சிரமத்தைத் தாங்கிக்கொள்ளுதல், கோபமின்மை, முகமலர்ச்சியுடன் இருத்தல், கனிவான பேச்சு, உறவுகளைப் பேணுதல், பணிவு, கட்டுப்படுதல், மென்மையை கடைப்பிடித்தல், அழகிய முறையில் உறவாடுதல், தோழமை கொள்ளுதல் போன்றவற்றை கடைப்பிடித்து மனிதர்களுடன் நடப்பது நன்மை சார்ந்த விடயமாகும். பிர் என்பது இதயத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துவதாகும். பாவம் மனித உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது ஒரு வகை தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துவது. இதன் விளைவாக உள்ளத்தில் சந்தேகமும், குறித்த விடயம் தவறு என்பதால் அது குறித்து மனதில் பயமும்; ஏற்படுவதோடு, குறித்த விடயம் அசிங்கமானது என்பதால் மனிதர்களில் கௌரவமானவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தெரிந்து கொள்வதை மனம் விரும்பாது. ஏனெனில் மனமானது இயல்பில் நல்ல விடயங்களை பிறர் காண்பதையே விரும்புகிறது. இதனால், பிறர் கண்டுகொள்வதை விரும்பாத, மனம் வெறுக்கின்ற செயற்பாடுகளாயின் அது பாவமாகும். அதில் எவ்வித நன்மையும் கிடையாது. உம்மிடம் இருக்கும் விடயம் பற்றி மக்கள் நல்லது என்று தீர்ப்பு கூறினும், அது பற்றிய சந்தேகமும் குற்ற உணர்வும் உம் மனதில் இருக்குமாயின் அது பாவமான ஒரு விடயமாகும். மக்கள் தீர்ப்பு ஒரு போதும் ஒரு சந்தேகமான ஒருவிடயத்தை சரிபடுத்தமாட்டாது. சில வேளை தீர்ப்பு கூறுபவர் குறித்தவிடயம் பற்றி போதிய அறிவின்றி தீர்ப்பு கூறிவிடுவார். குறித்த தீர்ப்பானது மார்க்க ஆதரத்தின் அடிப்படையில் இருப்பின் தீர்ப்புக்கோரியவரின் மனம் திருப்தியடையவில்லையெனில் மீண்டும் அவரிடம் செல்வது கடமையாகும்.