عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ رَضِيَ اللَّهِ عَنْهُ قَالَ: أَتَى النَّبِيَّ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! إِنَّ شَرَائِعَ الإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيْنَا، فَبَابٌ نَتَمَسَّكُ بِهِ جَامِعٌ؟ قَالَ:
«لاَ يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ».
وفي رواية: مِنْ حَدِيثِ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: آخِرُ مَا فَارَقْتُ عَلَيْهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ قُلْتُ: أَيُّ الأَعْمَالِ خَيْرٌ وَأَقْرَبُ إِلَى اللَّهِ؟ قَالَ: «أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ».
[صحيح] - [رواه أحمد والترمذي وابن ماجه وابن حبان] - [الأربعون النووية: 50]
المزيــد ...
அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள் எம்மீது அதிகமாக உள்ளன. எனவே எமக்கு கடைப்பிடிப்பதற்கு இலகுவான அதிகமான நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடிய ஒன்றை அறிவித்துத் தாருங்கள் என்று கேட்டார் அதற்கு நபியவர்கள்:
"உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் திளைத்தவாறு இருக்கட்டும் "என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [رواه أحمد والترمذي وابن ماجه وابن حبان] - [الأربعون النووية - 50]
ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, உபரியான வணக்கங்கள் அவரைப் பொறுத்தவரை அதிகமாக இருப்பதாகவும், தான் பலவீனமாக உள்ளதால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் முறைப்பட்டுவிட்டு, தன்னால் தொடர்ந்து கடைப்பிடிக்கமுடியுமான, அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரும் இலகுவான ஒரு அமலைக் காட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.
அப்போது நபியவர்கள், எல்லா நிலைகளிலும் தஸ்பீஹ், தஹ்மீத், இஸ்திக்பார், துஆ போன்றவற்றின் மூலம் எந்நேரமும் அல்லாஹ்வை நினைவுகூர்வதில் திளைத்திருக்கக் கூடியதாக அவரது நாவு இருக்கட்டும் என்று வழிகாட்டினார்கள்.