____
[] - []
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபியவர்களின் பணியாளராகிய அபூ ஹம்ஸா அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :
'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [الأربعون النووية - 13]
மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் அனைத்திலும் தனக்கு விரும்புவதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு விரும்பி தான் வெறுப்பதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு வெறுக்காத வரையில் யாரும் முழுமையான இறைநம்பிக்கையை அடைந்து கொள்ளமாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். எனவே மார்க்க விடயங்களில் தனது சகோதரரிடம் ஒரு குறையை கண்டால் அதனை திருத்துவதற்கு –சீர்செய்ய- அவர் முயற்சி செய்வார். அதே போன்று அவரில் நன்மையான விடயங்களை கண்டால் அவரை நெறிப்படுத்தி அதற்கு உதவிசெய்வதோடு மார்க்க மற்றும் உலக விவகாரங்களில் அவருக்கு அறிவுரை வழங்குவார்.