____
[] - []
المزيــد ...
அபூமஸ்ஊத் உக்பா இப்னு அம்ர் அல்-அன்ஸாரீ அல்-பத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நவின்றதாக கூறுகின்றார்கள் :
'நீ வெட்கப்படாவிட்டால், நினைத்தை செய்துகொள்' என்பது, முந்திய நபித்துவ வாசகங்களில் இருந்து மக்கள் கற்றுக்கொண்ட ஒன்றாகும்.'
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [الأربعون النووية - 20]
முன்சென்ற நபிமார்களின் உபதேசமாக வந்து, மக்களுக்கிடையில் பரிமாறப்பட்ட, வாழையடி வாழையாக இந்த சமுதாயத்தின் ஆரம்பம் வரை வந்தடைந்த ஓர் அம்சமாவது, 'நீ எதைச் செய்யவிரும்புகின்றாயோ, அதைப் பார். அது வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருந்தால், விட்டுவிடு. அவ்வாறில்லாவிட்டால், அதைச் செய். ஏனெனில், அசிங்கமானதைச் செய்யத் தடையாக இருப்பது, வெட்கமே! யாரிடம் வெட்கம் இல்லையோ, அவர் எல்லா மானக்கேடான பாவங்களிலும் மூழ்கிடுவார்.