பிரிவுகள்:
+ -

عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللهِ حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقَكُمْ كَمَا يَرْزَقُ الطَّيْرَ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا».

[صحيح] - [رواه الإمام أحمد، والترمذي، والنسائي، وابن ماجه، وابن حبان في صحيحه، والحاكم] - [الأربعون النووية: 49]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பி அவனை சார்ந்திருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்".

[ஸஹீஹானது-சரியானது] - [رواه الإمام أحمد والترمذي والنسائي وابن ماجه وابن حبان في صحيحه والحاكم] - [الأربعون النووية - 49]

விளக்கம்

உலகியல் மற்றும் மார்க்கம் சம்பந்தமான விவகாரங்களில் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், கெடுதிகளைத் தவிர்த்துக் கொள்வதிலும் அல்லாஹ்விடமே நாம் பொறுப்புச் சாட்ட வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம் அவர்கள் இந்த நபி மொழியினூடாக எம்மைத் தூண்டுகிறார்கள். ஏனெனில் எமக்கு ஏதும் கிடைப்பதும் கிடைக்காமல் நலுவிச் செல்வதும், நலவோ, கெடுதியோ ஏற்படுவதும் அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமிருந்து மாத்திரம் தான் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். அல்லாஹ்வில் முழுமையாகச் சார்ந்திருந்து நலவுகளைப் பெற்றுக்கொள்ளவும், கெடுதிகளைத் தடுப்பதற்குரிய காரணிகளை-வழிமுறைகளை- நாம் செய்வது அவசியமாகும். இவ்வாறு நாம் செய்யும் போது காலையில் வெறும் வயிற்றுடன் சென்று, மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்பும் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போன்று அல்லாஹ் உணவளிப்பான். பறவைகளின் இந்த செயற்பாடானது உணவைத் தேடுவதில் பிறரில் தங்கியிருக்காது, சோம்பல் கொள்ளாது முயற்சிசெய்தல், உழைத்தல் எனும் வழிமுறைகளில் ஒன்றாக உள்ளது. இந்த வழிமுறையையே மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தவக்குலின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருத்தல், வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்வதில் பிரதான காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.
  2. தவக்குல்-அல்லாஹ்வில் முழுமையாக நம்பிக்கை வைத்து பொறுப்புச்சாட்டுவதானது- காரணிகளை-தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் ஒரு போதும் முரண்படமாட்டாது, ஏனெனில் உண்மையான தவக்குல் காலை, மாலையில் வாழ்வாதாரத்தை தேடிச்செல்வதற்கு முரண்பட மாட்டாது என்பதை இந்நபிமொழி தெளிவாகக் குறிப்பிடுகிறது.
  3. தவக்குலும் உள்ளம் சார்ந்த அமலாக இருப்பதால்உள்ளம் சார்ந்த அமல்களுக்கு ஷரீஆ –மார்க்கம்- முக்கியத்துவம் அளித்துள்ளதை காண முடிகிறது.
  4. அல்லாஹ்வின் மீது பொறுப்புக்களை ஒப்படைக்காது வெறுமனே காரணிகளில் -வழிமுறைகளில் மாத்திரம் தங்கியிருப்பது மார்க்க ரீதியாக அவனில் காணப்படும் ஒரு குறையாகும் . அதே போன்று காரணிகள் எதையும் செய்யாது விட்டுவது பகுத்தறிவில்-புத்தியில்- உள்ள ஒரு கோளாராகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ الأمهرية الغوجاراتية Қирғизӣ النيبالية الدرية الصربية الطاجيكية Кинёрвондӣ المجرية التشيكية الموري الولوف Озарӣ الأوزبكية الأوكرانية الجورجية المقدونية الخميرية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு