عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما قال: قال رَسولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا، وَإِنْ كَانَتْ خَصْلَةٌ مِنْهُنَّ فِيهِ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: مَنْ إِذَا حَدَّثَ كَذَبَ، وإِذَا وَعَدَ أَخْلَفَ، وإذَا خَاصَمَ فَجَرَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ».
[صحيح] - [رواه البخاري ومسلم] - [الأربعون النووية: 48]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நான்கு குணங்கள் எவனிடம் உள்ளனவோ அவன் தெளிவான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் உள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வதும், பேசும் போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை துரோகம் செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும்தான் அவை (நான்கும்) ஆகும்."
[ஸஹீஹானது-சரியானது] - [رواه البخاري ومسلم] - [الأربعون النووية - 48]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நான்கு பண்புகள் குறித்து எச்சரித்துள்ளார்கள். அவை ஒரு முஸ்லிமிடம் காணப்படின் அப்பண்புகளின் காரணமாக நயவஞ்சகர்களுக்கு மிகவும் ஒப்பானவராக இருப்பார். பெரும்பாலும் இப்பண்புகள் யாரிடம் அதிகம் காணப்படுகிறதோ அவரின் நிலை நயவஞ்சகனை ஒத்த நிலையாகும். ஆனால் இப்பண்புகள் யாரிடம் அரிதாக காணப்படுகிறதோ அவர் இவ்வட்டத்தினுள் வரமாட்டார். அப்பண்புகளாவன:
முதலாவது: பேசினால் வலிந்து பொய் பேசுவான் அவனின் பேச்சில் உண்மை இருக்காது.
இரண்டாவது: ஒப்பந்தம் ஒன்றை செய்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மோசடி செய்வான்.
மூன்றாவது: வாக்களித்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மாறுசெய்வான்.
ஒருவருடன் சண்டை சச்சரிவில் ஈடுபட்டால் கடும் பகையை காட்டுவதோடு நேர்மை தவறி நடப்பதோடு, குறித்த நபருக்கு மறுப்புத் தெரிவிப்பதிலும் அவரின் கூற்றை பொய்யாக்குவதிலும் சூழ்ச்சி செய்து பொய்யையும் புரட்டையும் பேசுவான்.
நயவஞ்சகம் என்பது உள்ளிருப்பதற்கு மாற்றமாக வெளியே ஒன்றை செய்தல். இக்கருத்து இப்பண்புகளைப் பெற்றோரிடத்தில் காணப்படுகிறது. அவர் தன்னிடம் பேசுபவர், வாக்குறுதி அளிப்பவர், நம்பிக்கை வைப்பவர், வாதிடுபவர் மற்றும் உடன்படிக்கை செய்பவர்களிடம் நயவஞ்சகமாக நடந்து கொள்கிறார். மாறாக, நம்பிக்கையின்மையை மறைத்து இஸ்லாத்தை வெளிப்படுத்தும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நயவஞ்சகர் அல்ல. இந்த குணாதிசயங்களில் ஒன்றைக் கொண்டவர் அதைக் கைவிடும் வரை நயவஞ்சகத்தின் பண்புகளைக் கொண்டுள்ளார்.