عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ أَبِي مُوسَى الأَشْعَريِّ رَضِيَ اللَّهُ عَنْهُ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ إِلَى اليَمَنِ، فَسَأَلَهُ عَنْ أَشْرِبَةٍ تُصْنَعُ بِهَا، فَقَالَ: وَمَا هِيَ؟، قَالَ: «البِتْعُ وَالمِزْرُ»، فَقِيلَ لِأَبِي بُرْدَةَ: مَا البِتْعُ؟ قَالَ: نَبِيذُ العَسَلِ، وَالمِزْرُ: نَبِيذُ الشَّعِيرِ، فَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ» خرجه البخاري.
وَخَرَّجَهُ مُسْلِمٌ وَلَفْظُهُ: قَالَ: بَعَثَنِي رَسُولُ اَلله أَنَا وَمُعَاذٌ إِلَى اَليَمَنِ، فَقُلْتُ: يَا رَسُولُ اَللَّهِ! إِنَّ شَرَابًا يُصْنَعُ بِأَرْضِنَا يُقَال لَهُ: المِزَرُ مِنَ الشَّعِيرِ، وَشَرَابٌ يُقَالُ لَهُ: البِتْعُ مِنَ العَسَلِ، فَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ».
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «فَقَالَ: كُلُّ مَا أَسْكَرَ عَنِ الصَّلَاةِ فَهُوَ حَرَامٌ».
وَفِي رِوَايَةٍ لَهُ: «وَكَانَ رَسُولُ الله قَدْ أُعْطِيَ جَوَامِعَ الكَلِمِ بِخَوَاتِمِهِ، فَقَالَ: أَنْهَى عَنْ كُلِّ مُسْكِرٍ أَسْكَرَ عَنْ الصَّلَاةِ».
[صحيح] - [رواه البخاري ومسلم] - [الأربعون النووية: 46]
المزيــد ...
தனது தந்தை அபூமூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் அபூபுர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் அவரை (அபூ மூஸா அல் அஷ்அரியை) யமன் நாட்டுக்குப் அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் குறித்து) நபியவர்களிடம் கேட்க, அவை எவை? எனக் கேட்டார்கள்: அதற்கு அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவரகள்; 'அல்பித்உ, அல்மிஸ்ர்' என்றார்கள்.அப்போது அபூ புர்தாவிடம் அல்பித்உ என்றால் என்ன? எனக் கேட்க்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் என்றார்கள், அல்மிஸ்ர் என்பது தொலி நீக்கப்படாத வாற்கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.
-
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை யமனுக்கு அனுப்பினார்கள் என அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அங்கே சில பானங்கள் தயாரிக்கப்படுவதாகுவும், அதை அருந்துவது தடைசெய்யப்பட்டதா என நபியவர்களிடத்தில் வினவ நபியவர்கள் அந்த பானம் பற்றி விவரிக்குமாறு அவரை வேண்டிக் கொண்டார்கள். அப்போது அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கே ';பித்உ' மற்றும் 'மிஸ்ர்'; எனும் இரண்டு வகையான பானங்கள்; உண்டு. பித்ஃ என்பது தேனினால் தயாரிக்கப்படும் மதுசாரம், மிஸ்ர் என்பது வாற்கோதுமையினால் தயாரிக்கப்படும் மதுசாரம் என்று கூறினார்கள். உடனே சொற்சுருக்கமும் பொருட்செரிவும் வழங்கப்பட்ட நபியவர்கள் : போதை தரும் அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும் என்று மிகவும் சுருக்கமாக பதிலளித்தார்கள்.