عَنْ أَبِي مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ».
[قال النووي: حديث صحيح] - [رويناه في كتاب الحجة بإسناد صحيح] - [الأربعون النووية: 41]
المزيــد ...
நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, அவர்கள் கூறுகிறார்கள் :
'நான் கொண்டு வந்தவற்றுக்கு (இறைத்தூதுக்கு) ஏற்ப தனது மனோஇச்சை (கட்டுப்பட்டதாக) மாறும் வரை உங்களில் எவரும் உண்மையாக நம்பிக்கை கொண்டவராக மாட்டார்'
-
ஒருவரது ஈமான் பூரணமாக அமைய வேண்டுமாயின் நபியவர்கள் ஏவிய கட்டளைகளை மனமுவந்து விரும்பி, அவர் தடுத்தவற்றை வெறுத்து, அவர்கள் கொண்டு வந்ததற்கு ஏற்ப தனது நேசத்தை ஆக்கிக்கொள்ளும் வரை ஒரு மனிதன் முழுமையான ஈமான் கொண்டவராக மாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் விளக்குகிறார்கள்.