பிரிவுகள்:
+ -

عَنْ أَبِي هُرَيْرَة رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إنَّ اللَّهَ تَعَالَى قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقْد آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وما يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ».

[صحيح] - [رواه البخاري] - [الأربعون النووية: 38]
المزيــد ...

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றதாக அறிவிக்கின்றார்கள் :
'நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் : என்னுடைய நெருங்கிய அடியான் ஒருவரை யார் எதிர்த்து பகைமை பாராட்டுகின்றானோ அவனோடு நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனது அடியான் என்னை நெருங்குவதற்கு அவன் மீது நான் கடமையாக்கியவற்றை விட எனக்கு விருப்பத்திற்குரியவை வேறு ஏதுமில்லை. நான் எனது அடியானை விரும்பும் வரை அவன் (நப்லான்) உபரியான வணக்கங்களைக் கொண்டு என்னை நெருங்கிக்கொண்டே இருக்கின்றான். நான் அவனை விரும்பிவிட்டால் நான் அவன் கேட்கும் செவிப்புலனாகவும், அவன் பார்க்கும் பார்வையாகவும், அவன் பற்றும் கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் இருப்பேன். அவன் என்னிடம் கேட்டால் அதனை அவனுக்கு நிச்சயமாக கொடுப்பேன். அவன் என்னிடம் அடைக்கலம் தேடினால் அவனை நிச்சயம் பாதுகாப்பேன்.'

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [الأربعون النووية - 38]

விளக்கம்

யார் எனது நேசர்களில் ஒருவரை நோவினை செய்து அவருக்கு கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறாரோ அவருக்குக்கு எதிராக எனது பகையை பகிரங்கமாக அறிவிக்கிறேன் என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ் குத்ஸியில் குறிப்பிடுகிறார்கள். 'வலி' என்பவர் இறையச்சமுள்ள முஃமினாவார். ஒரு அடியான் பெற்றிருக்கும் ஈமான் (இறைவிசுவாசம்) மற்றும் தக்வாவிற்கு (இறையச்சம்) ஏற்ப அவனுக்கு அல்லாஹ்வின் நெருக்கமும் நேசமும் கிடைக்கிறது. ஒரு முஸ்லிம் அல்லாஹ் மிகவும் விரும்புகின்ற அவன் கடமையாக்கி கட்டயாப்படுத்திய வணக்கங்களை செய்து, தடைசெய்யப்பட்ட செயல்களை தவிர்த்தல் மூலமேயன்றி அவன் வேறு எதன் மூலமும் அல்லாஹ்வுடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை . எப்போதும் ஒரு முஸ்லிம் பர்ழான கடமைகளுடன் உபரியான (நப்லான) வணக்கங்களை செய்வதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தை அடைந்து கொள்ளும் வரை தனது இரட்சகனை நெருங்கிக் கொண்டிருக்கிறான். ஆகவே அல்லாஹ் அவனை நேசித்து விட்டால் குறிப்பிடப்பட்ட நான்கு உறுப்புகளினாலும் தான்விரும்பியவற்றை செய்வதற்கு வழிகாட்டுவான். அவரது செவித்திறனை அல்லாஹ் விரும்பியதை மாத்திரம் செவிமடுக்க வழிகாட்டுவான் . அவர் தனது பார்வையை, அல்லாஹ் எதைப் பார்ப்பதை விரும்பி அதன் மூலம் திருப்தி அடைவானோ அவற்றை பார்ப்பதற்கு உதவி செய்வான். அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் விடயங்களை மாத்திரம் தனது கையால் செய்வதற்கு அவனது கைக்கு அல்லாஹ் வழிகாட்டுவான். மேலும் அவனது காலுக்கு வழிகாட்டுவது என்பது அல்லாஹ் விரும்புகின்ற செயலுக்காக மாத்திரம் நடந்து செல்லுதல் மற்றும் நன்மையான காரியத்திற்கு விரைந்து செல்வதைக் குறிக்கும். இவற்றுடன் அந்த அடியான் அல்லாஹ்விடம் எதையாவது கேட்டுப் பிரார்த்தித்தால் அவன் கேட்டவற்றை அவனுக்கு அல்லாஹ் வழங்குவான். இந்த வகையில் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அடியானாக அவன் இருப்பான். அதே போன்று ஏதாவது ஒரு தீங்கிலிருந்து தன்னை பாதுகாக்குமாறு கோரி பாதுகாப்புத் தேடினால் அவன் பயப்படுகின்ற தீங்குகளை விட்டு அவனை அல்லாஹ் பாதுகாப்பான்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இந்த ஹதீஸ் அல்லாஹ் கூறியதாத நபி ஸல்லல்லாஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியாகும். இவ்வாறான ஹதீஸ்கள் 'ஹதீஸ் குத்ஸீ (புனிதமிக்க நபிமொழி), 'ஹதீஸ் இலாஹீ' (தெய்வீக நபிமொழி) எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறன. இவ்வாறான ஹதீஸ்களின் வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்விடமிருந்துமுள்ளதாகும். என்றாலும் அல்குர்னுக்குரிய தனித்துவங்கள் இதற்குக் கிடையாது. அதாவது அல்குர்ஆன் பெற்றுள்ள தனித்துவங்களான ஓதுவது வணக்கம், ஓதுவதற்கு வுழு செய்து கொள்ளுதல் (விரும்பத்தக்கது),சவால் விடுதல், அற்புதம் போன்றவை இவ்வகையான ஹதீஸ்களுக்கு கிடையாது.
  2. அல்லாஹ்வின் நேசர்களை நோவினைப்படுத்துவது அல்லது தீங்கு விளைவிப்பது தடுக்கப்பட்டிருப்பதோடு, அவர்களை நேசித்து அவர்களின் சிறப்பையும் தகுதியையும் ஏற்றுக்கொள்ள ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.
  3. அல்லாஹ்வின் எதிரிகளுடன் பகைமை காட்டுமாறு கட்டளையிடப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது ஹராமாக்கப்பட்டிருத்தல்.
  4. அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை பின்பற்றாது அவனின் நேசத்தை வாதிடுபவன் அவனின் வாதாட்டத்தில் பொய்யனாக உள்ளான்.
  5. கடமையாக்கப்பட்டவற்றை நிறைவேற்றி, தடைசெய்யப்பட்டவற்றை விட்டுவிடுவதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தை அடைந்து கொள்ளலாம்.
  6. அல்லாஹ் ஒரு அடியானை விரும்பி அவனின் பிரார்த்தனை ஏற்றுக்ககொள்வதற்கான வழிகளில் ஒன்று கடமையான விடயங்களை நிறைவேற்றி, தடுக்கப்பட்ட விடயங்களை தவிர்ந்து நடப்பதோடு நப்லான -உபரியான- வணக்கங்களை செய்வதாகும்.
  7. இறைநேசர்களின் சிறப்பும் அவர்களின் உயர் மகிமையும் எடுத்துரைக்கப்பட்டிருத்தல்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ الأمهرية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية الطاجيكية Кинёрвондӣ المجرية التشيكية الموري Итолёвӣ Канада الولوف Озарӣ الأوزبكية الأوكرانية الجورجية المقدونية الخميرية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு