عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى، قَالَ:
«إنَّ اللهَ كَتَبَ الحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا؛ كَتَبَهَا اللهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا؛ كَتَبَهَا اللهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا؛ كَتَبَهَا اللهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا؛ كَتَبَهَا اللهُ سَيِّئَةً وَاحِدَةً».
[صحيح] - [رواه البخاري ومسلم في صحيحيهما بهذه الحروف] - [الأربعون النووية: 37]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது இரட்சகன் நவின்றதாகக் கூறியதை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அறிவிக்கின்றார்கள் :
'நிச்சயமாகஅல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதி, பின்னர் அதனை விளக்கிக் கூறினான்.
யார் ஒரு நல்ல செயலை செய்ய எத்தனித்து அதனை அவர் செய்யவில்லையோ அதற்கு அல்லாஹ் அவனிடத்தில் முழுமையான ஒரு நன்மையை எழுதுகிறான். ஒருவர் ஒரு நன்மையான காரியத்தை செய்ய முனைந்து அதனை அவர் செய்வாரானால் அவருக்கு பத்து முதல் எழுநூறு நன்மைகள் எழுதப்படுவதுடன் அதனை பன்மடங்குகளாக அதிகப்படுத்திக் கொடுக்கிறான்.
ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்து, ஆனால் அதை அவர் செய்யவில்லையென்றால் அல்லாஹ் அதை ஒரு நல்ல செயலாகவே எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்து, அதை செய்தும் முடித்தால் அல்லாஹ் அதை ஒரு தீமையாக மட்டுமே எழுதிக் கொள்கின்றான்".
[ஸஹீஹானது-சரியானது] - [رواه البخاري ومسلم في صحيحيهما بهذه الحروف] - [الأربعون النووية - 37]
அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் நிர்ணயித்து அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை இரு மலக்குகளுக்கும் தெளிவுபடுத்திய விடயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸில் விவரிக்கிறார்கள் :
ஆகவே யார் நன்மை செய்ய விரும்பி அதனை செய்வதென உறுதிகொண்டு செய்யாவிட்டாலும் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அவ்வாறு அதனை செய்துவிட்டால் அவருக்கு பத்திலிருந்து எழுநூறு மடங்காகவும் அதைவிட பல மடங்கு அதிகமாகவும் நன்மைகளை எழுதிவிடுகின்றான். இவ்வாறு நன்மைகள் பல மடங்காக அதிகரிப்பதென்பது அவரின் மனத்தூய்மை மற்றும் பிறருக்கு நன்மை விளைதல் என்ற அடிப்படையிலாகும்.
யார் தீமையொன்றை செய்ய நாடி அதனை செய்வதற்கு உறுதிகொண்டும் பின்னர் அல்லாஹ்வுக்காக அதனை விட்டு விட்டால் அதற்காக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அதனை அவர் வேறு விடயங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டதனால் அந்தத் தீமையை செய்வதற்கான எந்த காரியங்களையும் செய்யாதிருந்தால் அதற்காக அவருக்கு எதுவும் எழுப்படமாட்டாது. அவர் இயலாமையின் காரணமாக அதனை செய்யவதை விட்டுவிட்டால் அவரின் எண்ணத்திற்கான கூலி எழுதப்படுகிறது. அவ்வாறு நினைத்த அந்தத் தீமையை செய்துவிட்டால் அவருக்கு ஒரு தீமை எழுதப்படும்.