عن أبي سعيد الخُدْريِّ رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 49]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்
'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமான- தாழ்ந்த- நிலையாகும்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 49]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொருவரினதும் இயலுமைக்கேட்ப- சக்திக்கு ஏற்ப- தீமையைத் தடுக்குமாறு இந்த ஹதீஸில் அறிவுருத்துகிறார்கள். ('அல் முன்கர்' என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடைசெய்த அனைத்து பாவகாரியங்கள் மற்றும் தீமைகளைக் குறிக்கும்) ஒருவர் தீமையை கண்டு அதனை தனது கையினால் தடுப்பதற்கான சக்தி பெற்றிருப்பின் –அல்லது அதிகாரத்தைப்பெற்றிருப்பின் - அவர் தனது கையால் தடுக்க வேண்டும். குறித்த தீமையை தடுப்பதற்கான இயலுமை அவரிடத்தில் காணப்படாவிட்டால்; தனது நாவினால் அப்பாவத்தை புரிபவரை தடுத்து அதன் விபரீதங்களை விளக்குவதுடன் தீமைக்குப் பதிலாக நன்மையின் பால் வழிகாட்ட வேண்டு ம் தனது நாவினால் குறித்த தீமையை தடுப்பதற்கு இயலவில்லையாயின் உள்ளத்தால் அத்தீமையை வெறுப்பதுடன் தனக்கு அத்தீமையை தடுப்பதற்கான பலம் கிடைத்தால் அதனை செய்வதாக மனதில் உறுதி கொள்ளல் வேணடும். தீமையை அல்லது பாவகாரியத்தை தடுப்பதில் ஆகக்குறைந்த நிலை மனதால் வெறுப்பதாகும்.