عن المقدام بن معدِيْكَرِب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«أَلَا هَلْ عَسَى رَجُلٌ يَبْلُغُهُ الْحَدِيثُ عَنِّي وَهُوَ مُتَّكِئٌ عَلَى أَرِيكَتِهِ فَيَقُولُ: بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللهِ، فَمَا وَجَدْنَا فِيهِ حَلَالًا اسْتَحْلَلْنَاهُ، وَمَا وَجَدْنَا فِيهِ حَرَامًا حَرَّمْنَاهُ، وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا حَرَّمَ اللهُ».
[صحيح] - [رواه أبو داود والترمذي وابن ماجه] - [سنن الترمذي: 2664]
المزيــد ...
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல்மிக்தாத் இப்னு மஃதீயக்ரிப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
தனது பஞ்சனையில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு மனிதரிடம் எனது செய்தி வந்து சேரும்.அவ்வேளை அவன் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் அடிப்படை இறைவேதமாகும்.அதில் அனுமதிக்கப்பட்டவை எவையென்பதை காண்கிறோமோ அதனை அனுமதிப்போம். அதில் எது ஹராம் என்பதாக காண்கிறோமோ அதனை நாம் தவிர்த்து ஹராமானதாகக் கருதுவோம். நபி ஸல்லல்லாஹு அவர்கள் ஹராமாக்கியவை அல்லாஹ் ஹராமாக்கியவை போன்றாகும்.))
[ஸஹீஹானது-சரியானது] - - [سنن الترمذي - 2664]
இந்த ஹதீஸில், ஒரு காலம் வரும்,அவ்வேளை மனிதர்களில் ஒரு பிரிவினர் பஞ்சனையில் அமர்ந்து கொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் விரிப்பில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபியவர்களின் செய்தியை அவர் பெறுவார். அப்போது அவர் உங்களதும் எங்களதும் விவகாரங்களில் தீர்ப்புக் கூற அல்குர்ஆன் ஒன்று மட்டுமே போதும் எனக் கூறுவார். அதில் ஹலால் என இருப்பவற்றை செயலாற்றுவோம், அதில் ஹராம் என்று குறிப்பிடப்பட்டவற்றை விட்டும் தூரமாவோம்; என்று கூறுவோர் பற்றி நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். பின் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தான் அல்லாஹ்விடமிருந்து செய்திகளை எத்திவைப்பவர் என்ற அடிப்படையில், தனது வழிமுறையில் தடுத்தவை மற்றும் தடைசெய்தவை அனைத்தும் சட்டத்தில் அல்லாஹ் தனது வேதத்தில் தடைசெய்த விடயங்களைப்போன்றதே எனத் தெளிவுபடுத்துகிறார்கள்.