عن أبي ذر رضي الله عنه قال: قال لي النبي صلى الله عليه وسلم:
«لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2626]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனக்கு கூறியதாக அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர், அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2626]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் நல்லறங்களை செய்யுமாறு தூண்டியுள்ளார்கள்.அது ஒருவரை சந்திக்கும் போது மலர்ந்த -இன்-முகத்துடன் இருப்பது போன்ற சிறிய ஒரு செயலாக இருப்பினும் சரியே என்கிறார்கள். இதன் மூலம் தனது சகோதர முஸ்லிமுக்கு அன்பு காட்டி, மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமென்பதால் இவ்வாறான விடயங்களை ஒரு முஸ்லிம் அற்பமாகக் கருதாது ஆர்வத்துடன் மேற்கொள்வது அவசியமாகும்.