عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «ما نقصت صدقة من مال، وما زاد الله عبدا بعفو إلا عزا، وما تواضع أحد لله إلا رفعه الله عز وجل »
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "தர்மத்தின் காரணமாக செல்வம் குறைந்து விடாது, மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதில்லை, அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

"தர்மத்தின் காரணமாக செல்வம் குறைந்து விடாது," என்றால் அது இன்னும் அதிகரித்து அதில் பரகத் உண்டாகும், ஆபத்திலிருந்து அது பாதுகாக்கப்படும் என்பதாகும். மேலும் செல்வம் அதிகரிக்கும் என்றால் அவனுக்கு செல்வத்தின் வாயலை அல்லாஹ் திறந்து கொடுப்பான் அல்லது அவன் தனது செல்வத்திலிருந்து தர்மத்திற்காக எடுத்ததை விடவும் அதிகரிக்கக் கூடியவாறு அல்லாஹ் அருள் புரிந்து கொண்டிருப்பான் என்பதாகும். மேலும் "மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதில்லை" என்றால் தவறு செய்தவனைத் தண்டிக்காது, அவனுடன் கடுமையாக நடந்து கொள்ளாது, மாறாக அவனை மன்னித்து விடுகிறவனைப் பற்றி மக்களின் உள்ளத்தில் கண்ணியமும், மதிப்பும் கூடும். இம்மையிலும் மறுமையிலும் அவனின் அந்தஸ்த்தும் கௌரவமும் உயரும் என்பதாகும்.மேலும் "அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை" என்றால் அல்லாஹ்வுக்கு மிகவும் பணிந்து நடப்பதுடன் மக்களுடன் மிருதுவாகவும், முஸ்லிம்களுடன் விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்கிறவன் என்பதாகும். எனவே எவனிடம் இந்தப் பண்புகள் இருக்குமோ நிச்சயமாக உலகில் அவனது மதிப்பு உயரும், மக்களின் உள்ளத்தில் அவனின் அன்பு அதிகரிக்கும், சுவர்க்கத்தில் அவனின் அந்தஸ்த்து மேலோங்கும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தர்மத்தை ஊக்குவித்தல்.
  2. சொத்துப் பாதுகாப்பிற்கும், அது அதிகரித்து, அபிவிருத்தி அடையவும் தர்மம் காரணமாகும்.
  3. சொத்து அதிகரித்தல் என்பது வாழ்வாதாரத்தின் வழிகளை அல்லாஹ் திறந்து கொடுப்பது போன்ற கண்ணுக்குப் புலப்படாத விடயமாகவும் இருக்கலாம், சிலவேளை குறித்த சொத்தில் அல்லாஹ் அபிவிருத்தியை இறக்கி, அவர் கொடுத்ததை விட அது அதிகரிப்பதைக் கண்கூடாகக் காணும் விதத்திலும் இருக்கலாம்.
  4. எமக்குத் தவறிழைத்தவனை மன்னிப்பதை ஊக்குவித்தல்.
  5. பணிந்து நடப்பதை ஊக்குவித்தல்.
  6. சிலர் நினைப்பது போன்று பணிந்து நடத்தல் என்பது இழிவல்ல, மாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று அது கண்ணியமாகும்.
  7. இந்தச் சிறப்பு முகஸ்துதிக்காக அல்லாமல் அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவருக்கே கிடைக்கின்றது. அதனையே "அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை" எனும் வார்த்தை உணர்த்துகின்றது.
  8. கண்ணியம், உயர்வு அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளது, அதற்குரிய காரணிகளை மேற்கொண்டவர்களில் அவன் நாடியோருக்கு அதனை வழங்குகின்றான்.