عن جرير بن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«مَنْ لَا يَرْحَمِ النَّاسَ لَا يَرْحَمْهُ اللهُ عَزَّ وَجَلَّ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2319]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 2319]
மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். ஆகவே உயிருள்ள ஜீவராசிகளுக்கு இரக்கம் காட்டுவது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கான மிகப்பெரும் வழியாக உள்ளது.