عن جابر رضي الله عنه:
أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ إِذَا صَلَّيْتُ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ، وَصُمْتُ رَمَضَانَ، وَأَحْلَلْتُ الْحَلَالَ، وَحَرَّمْتُ الْحَرَامَ، وَلَمْ أَزِدْ عَلَى ذَلِكَ شَيْئًا، أَأَدْخُلُ الْجَنَّةَ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: وَاللهِ لَا أَزِيدُ عَلَى ذَلِكَ شَيْئًا.
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 15]
المزيــد ...
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸலல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றி, ரமழானில் நோன்பையும் நோற்று, ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குகின்றேன். இதற்குமேல் அதிகமாக நான் எதுவும் செய்யவில்லையாயின், இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா? என்று எனக்குக் கூறுங்கள் என வினவினார்'. அதற்கு நபியவர்கள் 'ஆம்!' என்று பதிலளித்தார்கள்' அதற்கு அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக இதற்கு மேலதிகமாக எதனையும் நான் செய்யமாட்டேன் என்று கூறினார்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 15]
இந்த ஹதீஸில்,ஒரு மனிதர் உபரியான தொழுகைளை தவிர்த்து கடமையான ஐவேளைத் தொழுகைகளை மாத்திரம் தொழுபவராகவும், உபரியான நோன்புகளைத் தவிர்த்து கடமையான நோன்புகளை மாத்திரம் நோற்பவராகவும், ஹலாலானவை ஹலால் என ஏற்று அவற்றை செய்தும் ஹராமானவை தவிர்க்கப்படவேண்டியவை என்பதை ஏற்று அவற்றை தவிர்ந்தும் இருப்பாராயின்; அவர் சுவர்க்கம் நுழைவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.