عن جندب رضي الله عنه قال:
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ وَهُوَ يَقُولُ «إِنِّي أَبْرَأُ إِلَى اللهِ أَنْ يَكُونَ لِي مِنْكُمْ خَلِيلٌ فَإِنَّ اللهَ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا! أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ، أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ! إِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 532]
المزيــد ...
ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் 'உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர் ரழியலல்லாஹு அன்ஹு அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கஸ்தளங்களை வழிபாட்டுத்தளங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் அடக்கஸ்த் தளங்களை வழிபாட்டுத்தளங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்' என்று கூறுவதை நான் கேட்டேன்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 532]
நபியவர்கள் தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் தனது சமூகத்திற்கு முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்விடம் தனக்கிருக்கும் இடத்தைப் பற்றிக் கூறுகின்றார்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்தது போன்று தனக்கும் நேசத்தின் அதியுயர் தரம் கிடைத்திருப்பதாகக் கூறுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வை அன்றி வேறுயாரும் தனக்கு உற்ற தோழனாக இல்லையென மறுத்தார்கள், ஏனெனில் அன்னாரது உள்ளம் இறை நேசத்தாலும், அவனது மகத்துவத்தினாலும், அறிவாலும் நிரம்பியுள்ளது. எனவே அவனைத் தவிர வேறு யாருக்கும் அதில் இடமேதுமில்லை. அவ்வாறு படைப்பினங்களில் உற்ற தோழராக இருக்கும் ஒருவருக்கு அத்தகுதி இருப்பின் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மாத்திரமே உண்டு. பின்னர், யூத, கிறிஸ்தவர்கள் செய்தது போன்று தமது நபிமார்களின் அடக்கஸ்தளங்களில் அங்கீகரிக்கப்பட்ட நேசத்தில் அளவுகடந்து சென்று, அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் அல்லாஹ்வுக்கு இணையான கடவுள்களாக மாற்றியதை எச்சரித்தார்கள். அது மாத்திரமின்றி அவற்றின் மீது வழிபாட்டுத்தளங்களை அமைத்தார்கள். இது போன்ற பாதகச் செயலை அவர்களைப்போன்று செய்ய வேண்டாமென தனது சமூகத்தைத் தடுத்தார்கள்.