عن عائشة - رضي الله عنها-، أن أمَّ سَلَمَة، ذَكَرَت لرسول الله صلى الله عليه وسلم كَنِيسة رأتْهَا بأرض الحَبَشَةِ يُقال لها مَارِيَة، فذَكَرت له ما رأَت فيها من الصُّور، فقال رسول الله صلى الله عليه وسلم : «أولئِكِ قوم إذا مات فيهم العَبد الصالح، أو الرُّجل الصَّالح، بَنُوا على قَبره مسجدا، وصَوَّرُوا فيه تلك الصِّور، أولئِكِ شِرَار الخَلْق عند الله».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : உம்மு ஸலமா (ரலி) அபீ ஸீனியாவில் தாம் கண்ட தேவாலயத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அது 'மாரியா' என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா (ரலி) குறிப்பிட்டார்கள். அப்போது நபி (ஸல்), ''அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : உம்மு ஸலமா (ரலி) அபீ ஸீனியாவில் இருக்கும் போது அங்கு தாம் கண்ட தேவாலயத்தைப் பற்றியும், அதன் அலங்காரங்கள், உருவச் சிலைகளின் அழகு போன்றவற்றை வியந்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதன் பாரதூரத்தையும், ஓரிறைக் கொள்கைக்கு இதனால் ஏற்படும் விளைவையும் உணர்ந்த நபியவர்கள் தமது தலையை உயர்த்தி, தமது சமூகத்திற்கு எச்சரிக்கும் விதமாக அவர்கள் அவ்வாறு உருவச் சிலைகளைச் செய்வதற்கான காரணிகளை விளக்கினார்கள். நீங்கள் கூறும் இவர்கள் தங்களில் ஒரு நல்ல மனிதர் மரணித்தால் அவரது சமாதியில் பள்ளியொன்றை நிர்மாணித்து, அதில் தொழ ஆரம்பித்து விடுவார்கள், அச்சிலைகளை அப்பள்ளியில் பதித்து விடுவார்கள். இச்செயலைச் செய்வோர்தான் அல்லாஹ்விடம் மிக மோசமானவர்கள் என நபியவர்கள் விளக்கினார்கள். ஏனெனில் இது இணைவைப்பின்பால் இட்டுச் செல்லக் கூடியாதாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இணைவைப்பைத் தடுப்பதற்காகவும், சிலை வணங்கிகளுக்கு ஒப்பாகாமலிருக்கவும் கப்ருகள் மீது பள்ளிகளைக் கட்டுவதோ, பள்ளிகளுக்குள்ளே மரணித்தவர்களை அடக்கம் செய்வதோ கூடாது.
  2. கப்ருகள் மீது பள்ளிகளைக் கட்டுவதும், பள்ளிகளிலே உருவச் சிலைகள் வைப்பதும் யூத, கிறிஸ்தவர்களுடைய வழிமுறையாகும். இதனைச் செய்தவர்கள் அவர்களுக்கு ஒப்பாகி, அவர்களுக்குரிய தண்டனைக்கு இவர்களும் உள்ளாகின்றனர்.
  3. கப்ருகளுக்கருகில் தொழுவது இணைவைப்பிற்கான வழியாகும். அவை பள்ளிக்குள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் சரியே.
  4. உயிருள்ள பொருட்களின் உருவச் சிலைகளை எடுப்பது ஹராமாகும்.
  5. கப்ரின் மீது பள்ளி கட்டி, அதில் உருவச் சிலைகளை நட்டு வைப்பவர்தான் அல்லாஹ்வின் படைப்பினங்களில் மிகவும் தீயவர்களாகும்.
  6. ஓரிறைக் கொள்கையின் கண்ணியத்தை இஸ்லாம் முழுமையாகவே பாதுகாக்கின்றது. அதனால் தான் இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் அனைத்து வழிகளையும் அது அடைத்துள்ளது.
  7. கப்ருகள் மீது கட்டப்பட்ட பள்ளிகளில் தொழப்படும் தொழுகை செல்லுபடியற்றதாகும். ஏனெனில் நபியவர்கள் அதனைத் தடுத்து, அவ்வாறு செய்பவர்களை சபித்துள்ளார்கள். இத்தடை குறித்த செயல் செல்லுபடியற்றது என்பதையே காட்டுகின்றது.
  8. நபி (ஸல்) அவர்கள் தமது சமூகத்தின் நேர்வழியில் அதிக அக்கறை கொண்டிருந்தார்கள். தனது மரணப் படுக்கையிலும் யூத, கிறிஸ்தவர்கள் தமது நபிமார்கள், நல்லடியார்கள் விடயத்தில் செய்த காரியங்களைத் தமது சமூகத்திற்கு எச்சரிக்கை செய்தது இதற்கு மிகப்பெறும் எடுத்துக் காட்டாகும்.
மேலதிக விபரங்களுக்கு