عن جرير بن عبد الله البجلي رضي الله عنه قال: كنا عندَ النبيِّ صلى الله عليه وسلم فنظرَ إلى القمرِ ليلةَ البدرِ، فقالَ: «إنَّكم سترون ربَّكُمْ كما تروْن هذا القمر، لاَ تُضَامُونَ في رُؤْيَته، فَإن استطعتم أنْ لاَ تُغْلَبُوا على صلاة قبل طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا، فَافْعَلُوا». وفي رواية: «فنظر إلى القمر ليلة أربع عشرة».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறுகின்றார்கள் : "நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி "இந்த நிலவை நீங்கள் தடங்கலின்றிக்(தெளிவாக கஷ்டமின்றி) காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!'' என்று கூறினார்கள்". மற்றுமொரு அறிவிப்பில் "பதினான்காம் இரவில் நிலவைப் பார்த்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறுகின்றார்கள் : "அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது முழு நிலவுள்ள இரவில் அல்லது பதினான்காம் இரவில் முழு நிலவை நோக்கி "இந்த நிலவை நீங்கள் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்!" என்றார்கள். அதாவது மறுமையில் சுவனத்தில் விசுவாசிகள் அல்லாஹ்வைக் காண்பார்கள். அல்லாஹ் நிலவைப் போன்றவன் என்பது இதன் அர்த்தமல்ல, ஏனெனில் அவனைப் போன்று ஏதுமில்லை, அவன் இவற்றையெல்லாம் விட மிக மகத்தான, கண்ணியமானவன். இங்கு பார்க்கப்படும் பொருளை ஒப்பிடுவதல்ல நோக்கம், தெளிவான பார்வையை ஒப்பிடுவதே நோக்கமாகும். நாம் பௌர்ணமி தினத்தில் வெற்றுக் கண்ணால் தெளிவாக நிலவைக் காண்பது போல் மறுமையில் அல்லாஹ்வை வெற்றுக் கண்ணால் தெளிவாகக் காணலாம். சுவனவாசிகளுக்கு மிக விருப்பமான, இன்பமான விடயம் அல்லாஹ்வைக் காண்பதாகும். அதற்கு நிகராக ஏதுமில்லை. அத்துடன் இதனைக் கூறிய நபியவர்கள் தொடர்ந்து "சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!" என்று கூறினார்கள். "தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால்" என்பதன் அர்த்தம் அவ்விரு தொழுகைகளையும் முழுமையாகத் தொழுவதாகும், பள்ளியில் கூட்டாக நிறைவேற்றுவதும் இதில் அடங்கும். பஜ்ர், அஸர் தொழுகைகளைப் பேணி வருவதும் அல்லாஹ்வைக் காண்பதற்கான காரணிகளில் உள்ளவை என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது.