«مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5986]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
யார் தனது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீடிக்கப் படுவதையும் விரும்புகிறவர் தம் குடும்ப உறவைப் பேணி வாழட்டும்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் சந்திப்பின் மூலமும் உடலாலும் பொருளாலும் இவையல்லாத வேறு முறைகளிலும் உறவுகளை கண்ணியப்படுத்தி அவர்களுடன் உறவைப் பேணி வாழுமாறு ஊக்குவிக்கிறார்கள். ஏனெனில் வாழ்வாதாரம் பெருகுவதற்கும் நீண்ட ஆயுல் கிடைக்கவும் உறவைப்பேணி வாழுவது காரணமாக உள்ளது.