+ -

عن أبي هريرة رضي الله عنه مرفوعا: "قال تعالى : أنا أغنى الشركاء عن الشرك؛ من عمل عملا أشرك معي فيه غيري تركتُه وشِرْكَه".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால்,அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது இரட்சகன் கூறியதாக இச்செய்தியை அறிவிக்கின்றார்கள், இது போன்ற செய்திகளுக்கு ஹதீஸ் குத்ஸீ எனப்படுகின்றது, முகஸ்துதி போன்ற செயலின் மூலம் இணைவைப்பு கலந்த செயல்களிலிருந்து அல்லாஹ் விலகியிருப்பதாக இதில் அறிவிக்கின்றான், ஏனெனில் அவனுக்காக மாத்திரம் செய்யப்படும் நற்செயல்களை மாத்திரமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இணைவைப்பின் அனைத்து வகைகளை விட்டும் இந்நபிமொழி எச்சரிக்கின்றது, அது செயல்கள் ஏற்கப்படத் தடையாக உள்ளது.
  2. அனைத்து வித இணைவைப்புக் கலவைகளிலிருந்தும் செயல்களை அல்லாஹ்வுக்காக மாத்திரம் தூய்மையாக்குவது அவசியமாகும்.
  3. அல்லாஹ் அவனது கண்ணியத்திற்கேற்ப பேசக்கூடியவன்
  4. அல்லாஹ் தன்னிறைவுள்ளவன் என்பதை உறுதிப்படுத்துதல்.
  5. அவனுக்காக மாத்திரம் செய்யப்படும் நற்செயல்களை மாத்திரமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்.
  6. அல்லாஹ் பொதுவாகவே தயாளகுணமுடையவன்.
மேலதிக விபரங்களுக்கு