+ -

عن خولة الأنصارية رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : «إن رجالاً يَتَخَوَّضُون في مال الله بغير حق، فلهم النار يوم القيامة».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக கவ்லா அல்அன்ஸாரிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:
'சில மனிதர்கள் அல்லாஹ்வின் செல்வத்தை தான் விரும்பிய விதத்தில் அநியாயமான முறையில் கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்.

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 3118]

விளக்கம்

முஸ்லிம்களின் உடமைகளை, செல்வத்தை தவறான முறையில் கையாளும் சில மனிதர்களை நபியவர்கள் கூறி, அவர்கள் முறையற்ற விதத்தில் சொத்துக்களை சுரண்டுகின்றனர் என்பதைக் கூறுகின்றார்கள். உரிய முறையில் அல்லாது வேறு வழிகளில் செல்வத்தை சம்பாதித்து அதனை திரட்டி, உரிய இடங்களில்,சந்தர்ப்பங்களில் செலவளிக்கப்படாத செல்வம் குறித்த பொது கருத்து இதுவாகும்.இதில் அநாதைகளின் சொத்துக்கள், வக்பு சொத்துக்கள், அமானிதங்களை ஒப்டைக்க மறுத்தல், பொது நிதியிலிருந்து அனுமதியோ, தகுதியோ இல்லாமல் எடுத்தல் போன்றன இதில் உள்ளடங்குகின்றன.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கான கூலி நரகம்தான் என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மனிதர்களின் கைவசம் இருக்கும் செல்வம்,(சொத்து) அல்லாஹ்வுக்குரியது. அவற்றை முறையற்ற முறையில் தாம் நினைத்த பிரகாரம் கையாள்வதை தவிர்த்து, மார்க்கம் அங்கீகரித்த முறையில் செலவு செய்வதற்கு அவர்களை அல்லாஹ் பிரதிநிதியாக ஆக்கியுள்ளான். ஆகவே இந்த விடயம் முஸ்லிம்களில் அதிகாரம் படைத்தோர்,(ஆட்சித்தலமைகள்), மற்றும் ஏனைய முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவான நியதியாகும்.
  2. பொதுச்சொத்து விவகாரத்தில் ஷரீஆவின் கடுமையான நிலைப்பாட்டை இந்த ஹதீஸ் பிரதிபளிக்கிறது. யார் பொதுச்சொத்து விவகாரங்களில் ஏதாவது ஒன்றை பொறுப்பேற்கிறாரோ அவர் அந்த பொதுச்சொத்தை திரட்டியமை பற்றியும், அதனை செலவு செய்தது குறித்தும் மறுமையில் விசாரிக்கபடுவர்.
  3. இந்த எச்சரிக்கையினுள் யாரெல்லாம் சொத்து –பணம் வைத்துக்கொண்டு அதனை ஷரீஆ அங்கீகரித்த முறையிலன்றி வேறுவிதமாக கையாள்கிறார்களோ அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிக் கொள்ளும். குறிப்பிட்ட பணம் அல்லது செல்வம் தனக்கோ பிறருக்கோ சொந்தமாக இருப்பினும் சரியே.
மேலதிக விபரங்களுக்கு