عن عمران بن حصين رضي الله عنه قال: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلَاةِ، فَقَالَ:
«صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 1117]
المزيــد ...
இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : நான் மூல நோயினால் பீடிக்கப்பட்டிருந்தேன். எனவே தொழுகை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவினேன். அதற்கு நபியவர்கள்:
'நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழுவீராக, அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவீராக' என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 1117]
நின்ற நிலையில் தொழுவதுதான் தொழுகையின் அடிப்படை என்பதை நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். எனவே அவ்வாறு நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்து தொழ வேண்டும், அதுவும் முடியாவிட்டால் சாய்ந்து தொழ முடியும்.