عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«إِنَّ اللهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا، أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2734]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
'உணவு உண்டதும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தி புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2734]
அடியான் உணவு உண்ட பின்னரும் பானத்தை அருந்தியதன் பின்னரும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி தனது இரட்டசகனின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தி புகழ்வது அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான வழியாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.