عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
«إنَّ المُؤْمِنَ ليُدرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ القَائِمِ».
[صحيح بشواهده] - [رواه أبو داود وأحمد] - [سنن أبي داود: 4798]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :
'நற்பண்புள்ள முஃமினான அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்பாளி, மற்றும் இரவில் நின்று வணங்குவோனின் அந்தஸ்த்தை அடைந்து கொள்வான்'.
[அதன் ஆதாரங்களின் பிரகாரம் ஸஹீஹானது-சரியானது] - - [سنن أبي داود - 4798]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நற்பண்புள்ள ஒரு அடியான் தனது நற்பண்பின் மூலம் பகல் முழுதும் தொடரந்தும் நோன்பு நோற்று, இரவில் நின்று வணங்கும் ஒரு அடியானின் அந்தஸ்தையும் பெற்றுக் கொள்கிறான். பிறருக்கு நல்லது செய்தல், அழகிய வார்த்தை பேசுதல், முகமலர்ச்சியுடன் இருத்தல், மனிதர்களுக்கு தொந்தரவு செய்வதை தடுத்தல், அவர்களிடமிருந்து எதிர்ப்படும் சிரமங்களை தாங்கிக்கொள்ளல் போன்றவை நற்பண்பின் அடிப்படையாகும்.