عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
«اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2766]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :
அழித்தொழிக்கும் (பெரும் அழிவைத் தரும்) ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள் (ஸஹாபாக்கள்) 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அநாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 2766]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்திற்கு நன்மைகளை அழிக்கும் ஏழு பெரும் குற்றங்களை விட்டும் தூரமாகுமாறு ஏவுகின்றார்கள். அவை பற்றிக் கேட்கப்பட்ட போது அவற்றைப் குறித்து பின்வருமாறு தெளிவு படுத்தினார்கள்.
முதலாவது: அல்லாஹ்விற்கு நிகராக எவ்விதத்திலாவது இணையாளர்களை ஏற்படுத்துவதன் மூலம் இணைவைத்தல். மேலும் வணக்கவழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ்வுக்கும், அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் செலுத்துதல் ஷிர்க்காகும். இது மிகப்பெரும் பாவமாதலால் அதனை கொண்டு ஆரம்பித்துள்ளார்கள்;.
இரண்டாவது :சூனியம் செய்தல். சூனியம் என்பது முடிச்சுகள், மந்திரங்கள், மருந்துகள், புகை ஆகியவற்றைக் குறிக்கும். இவை சூனியம் செய்யப்பட்டவரின் உடலில் அவர் கொல்லப்படுவதன் மூலமோ அல்லது நோய் ஏற்படுவதன் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அல்லது கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தலாம். இது ஒரு ஷைத்தானிய செயலாகும். இவற்றில் பெரும்பாலனவை இணைவைத்தல் மற்றும் தீய ஆவிகள் விரும்பும் ஒன்றைக் கொண்டு மட்டுமே அடைய முடியும்.
மூன்றாவது: ஆட்சியாளரால் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒரு நியாயமான காரணத்தைத் தவிர, இறைவன் தடைசெய்த ஆன்மாவைக் கொல்வது.
நான்காவது: வட்டியை சாப்பிடுதல், அல்லது ஏதோ ஓரு வகையில் பயன்பெரும் விதத்தில் வட்டியை பயன்படுத்தல்.
ஜந்தாவது: பருவவயதை அடையாத நிலையில் தந்தையை இழந்த குழந்தையின் சொத்தில் அத்துமீறி நடந்து கொள்ளுதல்.(அளவு கடந்து அனுபவித்தல்).
ஆறாவது : காபிர்களுடனான போரில் புறமுதுகுகாட்டி ஓடுதல்.
ஏழாவது: கற்புள்ள சுதந்திர பெண்களின் மீது விபச்சார பழிசுமத்துதல். அதே போன்று ஆண்கள் மீது வீண் பழி சுமத்துவதும் இதில் உள்ளடங்கும்.