«الْجَنَّةُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ، وَالنَّارُ مِثْلُ ذَلِكَ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 6488]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'சுவனம் உங்களொருவரின் செருப்பின் வாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 6488]
ஒரு மனிதனுக்கு தனது செருப்பின் வார் எவ்வளவு சமீபமாக உள்ளதோ அதேபோன்று சுவனமும் நரகமும் அவனுக்கு சமீபமாக உள்ளதாக நபியவர்கள் இந்த ஹதீஸில் அறியத் தருகின்றார்கள். ஏனெனில் அவன் சிலவேளை அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் ஒரு வணக்கத்தைச் செய்வான், அது அவனை சுவனத்தில் நுழைவித்து விடுகின்றது. சிலவேளை அவன் ஒரு பாவத்தைச் செய்திருப்பான். அவனை நரகில் அவன் அறியாமலே பல வருடங்கள் தள்ளி விடுகின்றது.