عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما مرفوعاً: قال: لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشاً ولا متفحشاً، وكان يقول: «إن من خياركم أحسنكم أخلاقًا».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரலி) அவர்கள் : "நபி (ஸல்) அவர்கள் கெட்ட மனிதராகவோ, கெட்ட பேச்சுக்கள் பேசுகின்றவராகவோ இருக்கவில்லை. மேலும் "உங்களில் சிறந்தவர் உங்களில் நற்பண்புடையவரே " என்று நபியவர்கள் சொல்வார்கள்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் கெட்ட பேச்சுக்கள் பேசுகின்றவராகவோ, கெட்ட கருமங்கள் செய்கின்றவராகவோ, அதன் மீது நாட்டம் கொண்டவராகவோ இருக்கவில்லை. மாறாக அவர்கள் மகத்தான நற்பண்புடையவராகவே இருந்தார்கள். மேலும் நல்ல பண்பு, நல்ல கருமங்களைச் செய்யவும், பாவங்களை விடவும் தூண்டுவதால் விசுவாசிகளில் சிறந்தவர் அவர்களில் நற்பண்புடையவரே என்று அன்னார் கூறினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மோசமான வார்த்தை, தீய செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்வது விசுவாசிக்கு அவசியமாகும்.
  2. நபி (ஸல்) அவர்கள் தமது குணத்தில் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வார்கள், நற்செயல், நல்வார்த்தை தவிர வேறு எதுவும் ஒரு போதும் அவர்களிடமிருந்து வெளிப்பட்டதில்லை.
  3. நற்பண்புகள் என்பது விசுவாசிகள் தமக்கிடையே போட்டியிடுவதற்கான ஒரு களமாகும். அதில் முந்திக் கொண்டவர் சிறந்த மற்றும் பரிபூரண விசுவாசியாக இருப்பார்.
மேலதிக விபரங்களுக்கு