عن جابر بن عبدالله رضي الله عنهما مرفوعاً: «إن من أحبكم إلي وأقربكم مني مجلساً يوم القيامة أحاسنكم أخلاقاً، وإن أبغضكم إلي وأبعدكم مني يوم القيامة الثرثارون والمتشدقون والمتفيهقون» قالوا: يا رسول الله قد علمنا «الثرثارون والمتشدقون»، فما المتفيهقون؟ قال: «المتكبرون».
[صحيح] - [رواه الترمذي]
المزيــد ...

"நிச்சயமாக உங்களில் நற் பண்புள்ள ஒருவர் எனக்கு மிகவும் விருப்பமான வரும்,மறுமையில் எனக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய வருமான சிலரைச் சேர்ந்தவராவார்.மேலும் உங்களில் அதிக பிரசங்கியும்,வீனாக இலக்கிய மொழி பேசுகிறவனும்,பெருமைக் காரணும் எனது கடும் கோபத்திற்குரிய வரும் மறுமையில் என்னை விட்டும் அதிகத் தொலைவில் இருக்கின்ற வருமாகிய சிலரைச் சேர்ந்தவர்களாவர்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என ஜாபிர் இப்னு அப்துல்லஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:நபிகளாரின் வாக்கிலிருக்கும் (إن من)எனும் சொல் சில என்ற கருத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது.இதன்படி உங்களில் எவர் சிருஷ்ட்டி கர்த்தாவுடனும்,சிருஷ்ட்டிகளுடனும் நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்கின்றாரோ அவர் உங்களில் எனக்கு விருப்ப மான சிலரில் ஒருவராவார்,அவ்வாறே அவர் மறுமையில் எனக்குப் பக்கத்தில் இருக்கும் சிலரிலும் ஒருவராவார்.மேலும் உங்களில் யாரெல்லாம் தேவையில்லாமல் அதிகம் பேசுகின்றனரோ,வீனாக இலக்கிய மொழி பேசுகின்றனரோ,மேலும் மற்றவர்களிடம் தங்களின் அந்தஸ்த்தை எடுத்துக்கூறி பெருமை பேசுகின்றாரோ அவர்கள் எனது வெருப்புக்குரிய மற்றும் மறுமையில் என்னை விட்டும் தூரத்தில் இருக்கின்ற சிலரைச் சேர்ந்தவர்களாவர்.எனப் பொருள் படும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு