பிரிவுகள்:

عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: «إن الرفق لا يكون في شيء إلا زانه، ولا ينزع من شيء إلا شانه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

மென்மையைக் கடைபிடிப்பவன் தனது தேவைகள் அனைத்தையுமோ, சிலதையோ அடைந்து கொள்வான். வன்மையைக் கடைபிடிப்பவன் அதனை அடைந்து கொள்ள மாட்டான், அவ்வாறு அடைந்தாலும் சிரமத்துடனையே அடைவான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மென்மையைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஏனெனில் அது ஒரு மனிதனை மக்கள் பார்வையிலும், அல்லாஹ்விடத்திலும் அழகாக்கிக் காட்டுகின்றது.
  2. வன்முறை, கடும்போக்கு, கடின உள்ளம் போன்றவற்றை விட்டும் தூரமாக இருத்தல் அவசியமாகும். ஏனெனில் அது ஒரு மனிதனை மக்கள் பார்வையிலும், அல்லாஹ்விடத்திலும் அசிங்கமாகவே காட்டுகின்றது.
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு